
" உக்ரைன் போரை 50 நாட்களுக்குள் நிறுத்த விட்டால் ....... " ரஷ்யாவின் மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை செய்திருக்கிறார்.
இப்படி எல்லாம் நடக்கும் என்று தெரிந்து தான்
ரஷ்யா வடகொரியாவுடன் ராணுவ ஒப்பந்தத்தை செய்து கொண்டிருக்கிறது.
நிபந்தனை இன்றி ரஷ்யாவுக்கு எங்கள் ராணுவத்தை அனுப்பி உதவுவோம் என்று வட கொரிய அதிபர் கூறி இருக்கிறார்.
இப்பொழுதே வடகொரிய ராணுவம் ரஷ்யாவுக்காக போரிட்டுக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவோ உக்ரைனுக்கு ஏவுகணைகளை கொடுப்போம், ஏவுகணை தடுப்பு அமைப்பை கொடுப்போம் என்று கூறுகிறது. இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது சுலபமாக போர் மேகங்கள் கலைந்து போகாது என்றே தோன்றுகிறது.
டென்மார்க்குக்கும் அமெரிக்காவுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தப்படி அமெரிக்கா தனது ராணுவ நிலைகளை டென்மார்க் எல்லையில் அதாவது ரஷ்யாவுக்கு மிக அருகில் அமைக்க முடியும்.
இது ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று அந்த நாடு ஆட்சேபம் தெரிவிக்கிறது.
தமிழ்நாட்டில் நத்தம் அருகே காசு வைத்த சூதாடியதாக மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து இருக்கின்றனர். ஒருபுறம் கம்ப்யூட்டர் மூலமாக ஆன்லைனில் சூதாடி பணத்தை லட்சம் லட்சமாக இழந்து விட்டு
தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆன்லைன் சூதாட்டம் சட்டபூர்வமானதாக இருக்கிறது. ஆனால் 150 ரூபாய் பணத்தை வைத்து விளையாடியவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். சட்டத்தில் என்ன முரண்பாடு பாருங்கள் !
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் நீர் நிலைகளை செயற்கைக்கோள் மூலமாக கண்காணித்து நீர் இழப்பு மற்றும் ஆக்கிரமிப்புகளை
தடுக்க அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.
நீர் நிலைகளை மனிதர்கள் மட்டும் ஆக்கிரமிப்பு செய்வதில்லை. ஆகாயத்தாமரை போன்ற தாவரங்கள் கபளீகரம் செய்து விடுகின்றன. ஆகாய தாமரையை கண்டுபிடிப்பதற்கு செயற்கைக்கோள் தேவை இல்லை. வெறும் கண்ணால் பார்த்தாலே போதும்.
ஆனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர் நிலைகளில் ஆகாயத்தாமரையின் ஆக்கிரமிப்பு அதிகமாக காணப்படுகிறது . அரசு அதை கண்டு கொள்வதே இல்லை.
" தினம் ஒரு குறள் " பகுதியில் திருக்குறளை மட்டும் பதிவிட்டால் போதாது.
அந்தப் பாடலின் பொருளையும் தெரிவித்தால்தான் வேற்று மொழிக்காரர்களுக்கும் அதன் அர்த்தம் தெரியும்.
வெ.ஆசைத்தம்பி
தஞ்சாவூர்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?