என்ன ஆச்சரியம் பாருங்கள்...
சொல்லி வைத்தாற் போல் இன்றும் ஒரு வாசகர் நண்பர் (திரு.ஆ.மாடக்கண்ணு
பாப்பாங்குளம்)
நமது அருள் தரும் தெய்வம் இதழ் சந்தாவுக்கு ஆர்வமுடன் சம்மதித்து
நானூறு அனுப்பி வைத்தார் .
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்று சும்மாவா சொன்னார்கள்.
தமிழ் நாடு இ பேப்பரின் வாசக நட்புகளுக்கு அன்பான வணக்கங்களை சொல்லி விட்டு கடிதத்திற்கு வருகிறேன்.
பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து.
8--ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி.
போகிற போக்கைப் பார்த்தால் மாணவர்களுக்கு இனி எந்தத் தேர்வு தொந்தரவும் தராமல்
பாஸ் பண்ணி விட்டு பரவசப் படுத்துவார்கள் போலிருக்கே.
நினைத்துப் பார்த்தால் நெஞ்சம் கொஞ்சம் பதறத் தான் செய்கிறது.
தேசியக் கல்விக் கொள்கையின் முக்கியத்துவத்தை இப்போது தான் உணர்ந்திருக்கிறது திமுக அரசு என்கிறார் அண்ணாமலை.
உருப்படியான சில விஷயங்களும் நடந்தேறி இருக்கின்றன என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த செய்தியை படித்தவுடன், கமல்ஹாசன் திமுக --
பாஜக நட்புறவை உருவாக்குவதற்காகத் தான் டில்லியில் மோடிஜியை சந்தித்தார் என்ற செய்தி ஏனோ நினைவில் வந்து எட்டிப் பார்க்கிறது.
344 வது குறளின் முதல் பாதி...
'தவம் செய்வதற்கு ஒரு
பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும்...'
என்ற விளக்கத்தைப் படித்ததும், மனம் அதில் ஒட்ட சற்று மறுத்தது உண்மை.
தவம் செய்ய வேண்டும் என்ற பற்று இல்லாமல் தவம் செய்வது எப்படி சாத்தியம் என்று
அரைவேக்காடாய் நான் யோசித்ததை அப்படியே உங்களிடம் சமர்ப்பிக்கின்றேன்.
இந்த சமயத்தில் இன்னொரு சிந்தனையும் கிடைக்கிறது.
ஆசையைத் துறந்தவன் புத்தனென்று யார் சொன்னது?
நிழலாசையில் தானே
போதி மரத்தடியில்
போயமர்ந்தான் புத்தன்!
இதை உங்கள் சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்.
இன்னொரு
கிளை கிளை சிந்தனை...
புத்தர் அத்தி மரத்தடியில் உட்கார்ந்த போது தான்
ஞானம் ( போதம்)
உதித்தது என்கிறார்களே..
எப்படி?
போதி மரம் தான்
அத்தி மரமா?
தெரிந்தவர் யாரும் சந்தேகம் தெளிவித்தால் சந்தோஷம் அடைவேன்.
முகில் தினகரனின் ஆசிரியரும் மாணவனும் சிறுகதை
சிறப்பு!
கோபி பச்சமுத்து எழுதிய நவகிரஹங்களின் மகத்துவங்கள் கட்டுரை அருமை அருமை!
வேதாத்திரி மகரிஷி யின் மனவளக்கலை பயிற்சி வகுப்புக்கு
போன சமயத்தில்
( சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு)
ஒரு நாள், பேராசிரியர் சுப்பிரமணியம் அவர்கள் நவக்கிரக தவம் பற்றிய கிளாஸ் எடுத்தார். இது மாதிரி ஒவ்வொரு கிரகத்தின் சிறப்புகளையும் விளக்கி சொல்லி அதை கற்பனையில் மனதுக்குள் வரித்துக் கொண்டு தவம் இருக்கச் சொல்லி சக்தி பெருக்கிய மலரும் நினைவுகள்
நெஞ்சில் நிழலாடி நெகிழ்வை தந்தன.
தமிழ் நாடு இ பேப்பரை வாசிக்கும் போது இப்படி பலப்பல
இதமான அனுபவங்கள் நமக்கு
உண்டாகிறது என்பது மட்டுமல்ல... புத்தம் புது உணர்வுகளால் செதுக்கப் படுகிறோம் என்று நினைக்கும் போது பெருமிதம் அள்ளுகிறது.
இறையன்பு எழுதிய
இலக்கியத்தில் மேலாண்மை நூலை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியது நூல் விமர்சனம்.சூப்பர்...
சூப்பர்!
தினம் ஒரு தலைவர்கள் பகுதி ராஜ களை கட்டுகிறது.
நித்தம் நித்தம் இதுவரை கேள்விப் பட்டிராத வரலாற்று ஆளுமைகளைப் பற்றிய வரலாற்றை
வாசிக்கும் போது மன வளம் கூடுகிறது என்பதை உணர முடிகிறது.
ஆசிரியர் குழுவினருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
தமிழ் நாடு இ பேப்பரில் வெளி வரும் வாசகர் கடிதங்கள்
இலக்கியத் தரமாக இருக்கின்றன. சக நண்பர்களின் தொடர் பங்களிப்புக்கு ராயல் சல்யூட்!
கவிதைப் பக்கங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.
அற்புதம்... அற்புதம்..
இன்று சினிமா செய்திகளை படிக்க நேரம் கிடைத்ததால்
அந்தப் பக்கம் போனேன்...
அடடா...சினிமா தானே என்று அலட்சியப் படுத்தாமல் அட்டகாசப் படுத்தி உள்ளீர்கள்.
தமிழ் நாடு இ பேப்பரின் சுவையும்
சூடும் நாளுக்கு நாள் மெருகேற வாசகப் பெருமக்களை பேருவகை அடைய வைக்கின்றன.
தொடர்ந்து ஜெயக்கொடி நாட்டி வரும் தமிழ்நாடு இ பேப்பர் வாழ்க வாழ்க
வளர்க வளர்க!
பி.வெங்கடாசலம்
தென்காசி