வாசகர் கடிதம் (பி.வெங்கடாசலபதி) 27.07.25

வாசகர் கடிதம் (பி.வெங்கடாசலபதி) 27.07.25


27.07.2025


இந்த தடவை பிரதமர் மோடியின் வருகை தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாக கட்சி வட்டாரத்தில் கருதப்பட்டது. 

ஒவ்வொரு தடவையும் 

இப்படித் தான் எதிர் பார்க்கப் படுகிறது.

ஆனால் சரியான ரிசல்ட் அல்லது முன் நகர்வு ஏனோ கை கூடாமலே போகிறது.

இது மேலோட்டமான பார்வை தான்.

ஆனால் உள்ளுக்குள் ஓடும் ரகசியங்கள் யாருக்குத் தெரியும்?

பிரசாந்த் கிஷோர் போன்ற வியூக நிபுணர்களாலே கூட துல்லியமாக சொல்லி அடிக்க முடியாத அரசியல் அல்லவா இங்கே கொடி கட்டிப் பறக்கிறது...!


பிரதமர் மோடியைப் பற்றி இன்று தமிழ் நாடு இ பேப்பரில் வந்திருந்த இரண்டு 

செய்திகள் முக்கியம்... சுவாரஸ்யம்..

ஒன்று...

பிரதமர் பதவியில் தொடர்ந்து 4078 நாட்களை கடந்து இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்தது பற்றியது.

இரண்டு: இங்கிலாந்தில் மோடியின் கனிவால் நெகிழ்ந்த மொழி பெயர்ப்பாளர் பற்றிய 

செய்தி.

இரண்டுமே மோடியின் 

மதிப்பை உயர்த்தும் 

வண்ணம் வந்திருந்தது சிறப்பு.

தமிழக மக்கள் உரிமை மீட்பு என்ற பெயரில் நடை பயணத்தை தொடங்கினார் அன்புமணி.

பலன் என்ன என்று யோசிக்கும் போது 

தமிழ் பத்திரிகைகளில் 

கொஞ்ச நாள் பாத யாத்திரை சம்பந்தமான ஜோக்ஸ் 

படித்து சிரிக்கலாம்.

அதற்கு மேல் இங்கே 

எதுவும் நடக்காது என்று அன்புமணிக்கே 

தெரியும் என்பது தான் 

உச்ச நகை முரண்... அல்லது உச்ச சோகம்...! 


லால்குடி வெ.நாராயணன்

எழுதிய தப்புக் கணக்கு கொஞ்சம் ஓவர் தான் என்றாலும் 

இயல்பாக இருத்தலே உத்தமம் என்ற மெசேஜ் பதுங்கி யிருந்ததால் சபாஷ் போட வைக்கிறது.

  

தமிழ் நாடு இ பேப்பரில் செய்திகள் வெளி வரும் விதம் 

செம கிளாஸ்... கலக்கல் என்றே சொல்லலாம்.

அதிகாலையில் எழுந்து இ பேப்பரை 

டச் பண்ணினால் போதும்...மனத் திருப்தியோடு படித்து விட்டு அடுத்த வேலைக்கு போய் விடலாம். வேறு எந்த நாளிதழையும் வாங்கிப் படிக்க வேண்டிய அவசியமே ஏற்படாது!


ஒரு செய்திக்கு வந்திருக்கும் தலைப்பை பாருங்கள்...


முதலமைச்சர் மு.க.

ஸ்டாலின் வைகோவுக்கு பாராட்டு... கமல்ஹாசனுக்கு வாழ்த்து!

ராஜ்ய சபா உறுப்பினர் 

பதவியை நிறைவு செய்து விட்டு வருபவருக்கு பாராட்டாம்!

புதிதாக நுழைபவருக்கு வாழ்த்தாம்!

வழக்கமானதைக் கூட 

வனப்பு மிக்கதாக 

ஜோடிப்பது பத்திரிகை யின் தரத்தை உயர்த்தி காட்டுகிறது!

கவிதைகளின் அணி வகுப்பு தமிழ் நாடு இ பேப்பருக்கு தனி மகுடம் என்றே சொல்லலாம்.

வித விதமான பாணியில் வித விதமான கருத்துக்களை கவிஞர் பெருமக்கள் காட்டாற்று வெள்ளமாய் தூள் பறத்துகிறார்கள்.

பாராட்டி மகிழ்வதற்கு 

இன்னும் இன்னும் என்று எத்தனையோ இருக்கிறது என்பது தான் தமிழ் நாடு இ பேப்பரின் ஸ்பெஷல்!

ஆசிரியர் குழுமத்தின் 

அர்ப்பணிப்பு மிளிரும் 

அற்புதமான திறனுக்கு ராயல் சல்யூட்!


பி.வெங்கடாசலபதி

தென்காசி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%