வாசகர் கடிதம் (பி.சிவசங்கர்) 25.08.25

வாசகர் கடிதம் (பி.சிவசங்கர்) 25.08.25



அருள் தரும் தெய்வம் இதழை யார் முதலில் படிப்பது என்பதில் 

போட்டா போட்டி இருந்தது எங்கள் வீட்டில்... எப்படி அந்த பிரச்னையை தீர்த்தோம் தெரியுமா?

கேட்டால் நம்ப மாட்டீர்கள்... அல்லது 

ஆச்சரியப் படுவீர்கள்.

பொறியியல் கல்லூரியில் படிக்கும் எங்கள் பையன் மட்டும் நல்ல வேளை...

போட்டிக்கு வரவில்லை...

நீங்கள் எல்லோரும் படித்து முடித்த பிறகு கடைசியில் படித்துக் கொள்கிறேன் என்று பெருந்தன்மையுடன் சொல்லி விட்டான்...

அவன் போக எங்கள் 

ஐந்து பேருக்குள் தான் 

போட்டி. தீர்வுக்கு ஐடியா கொடுத்தது எங்கள் தாயார் தான்.

மறு பேச்சு சொல்லாமல் ஒப்புக் கொண்டோம்.

அப்படி என்ன ஐடியா?

சீக்கிரம் சீக்கிரம்...

என்று நீங்கள் ஆவலாய் இருப்பது புரிகிறது...


அதிகமா கற்பனை செய்து விடாதீங்க...

சிம்பிள் ஐடியா தான்...

' அஞ்சு பேரோட பெயரை சீட்டில் தனித்தனியாக எழுதி

போட்டு ஒவ்வொன்றாக எடுப்போம்... அந்த வரிசை முறையில் தெய்வம் இதழைப் படிப்போம்...'

என்று சொன்ன தாயாரின் யோசனைப் படி நடந்து, போட்டா போட்டிக்கு முற்றுப்புள்ளி வைத்தோம்.

இந்த மாதிரியான அனுபவங்களை ( இருந்தால்)சக வாசக அன்பர்களும் அனுப்பி 

சுவாரஸ்யப் படுத்தலாமே!

இதனால் சகலருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் 

தெய்வம் இதழுக்கு சந்தேகமில்லாமல் 

வரவேற்பு அள்ளுகிறது.

மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.தெய்வம்

இதழ் ஆசிரியருக்கு 

வாழ்த்துக்கள்...

பாராட்டுக்கள்...

வாழ்க வாழ்க 

வளர்க வளர்க!


அரசியலமைப்பு சட்டமே ஆபத்தில் சிக்கியுள்ளது.

ஸ்டாலின் பேச்சு.

அவர்களைக் கேட்டால் 

அரசியல் ஒழுங்கீனங்களால் 

நாட்டுக்கே ஆபத்து என்று அங்கலாய்ப்பார்களே.

மிஸ்டர் பொதுஜனம் தான் இதற்கு தக்க பதில் கொடுக்க வேண்டும்.

கனிமொழிக்கு பெரியார் விருது 

திமுக அறிவிப்பு.

பட்ட காலிலே படும் என்பது போல் 

பதவியும் பவுசும் உள்ளவர்க்கே மீண்டும் மீண்டும் விருதுகளும் விசேஷங்களும் போய்ச் சேருகின்றன.

 Anyhow, கனிமொழிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!


அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு --+

புஜாரா அறிவிப்பு.

நல்ல அழுத்தமான கிரிக்கெட் வீரர்... 

யார் கண் பட்டதோ...?!


மதுரை மாநாட்டுக்கு எத்தனை மறைமுகத் 

தடைகள்.-+ தவெக தலைவர் விஜய் விளாசல் விவரிப்பு!

முதலில் நேரடித் தடைகள் இல்லாமல் இருந்ததற்கு நன்றி சொல்ல வேண்டும் விஜய்!

அடுத்து, நீங்கள் எம்.ஜி.ஆரை இந்த நேரத்தில் மறவாமல் நினைத்துப் பார்க்க வேண்டும். புதுக்கட்சியான

அதிமுக வை -- எம்.ஜி.ஆரை நினைத்துப் பார்க்க வேண்டும்..அவர் அனுபவிக்காததா...

அடேங்கப்பா... எத்தனை எத்தனை வேதனைகள்...

சோதனைகள்...

நினைத்துப் பார்த்து 

விஜய் ஆறுதலும் உற்சாகமும் ஒரே நேரத்தில் அடைய வேண்டும். இன்னும் நீங்கள் பயணித்துக் கடக்க வேண்டிய தூரம் அவ்வளவு பெரிதாக இருக்கிறது.

காலம் தான் பதில் சொல்ல உங்களைப் பத்திரப் படுத்திக் கொள்ள வேண்டும்.

வழக்கம் போல் நலம் தரும் மருத்துவம் பகுதியில் நல்ல கருத்துக்கள்.

பித்தப்பை கற்கள் உள்ளவர்கள் 

ஏலக்காய் தேநீரை தொடவே கூடாது

என்ற எச்சரிக்கை கட்டுரை அபாரம்...

அலாரம்!

மஞ்சள் பிள்ளையாரை

முதலில் நாம் வணங்குவதன் 

ரகசியம்...

அசோக் ராஜாவின் ஙட்டுரை அசத்தல் ரகம்.


கவிதைகள் அனைத்தும் ஜோர் ஜோர்! என்னவோ 

இன்று நடேஷ் கன்னா 

எழுதிய குறுங் கவிதைகள் இன்னமும் என்நெஞ்சில் இனித்துக் கொண்டிருக்கின்றன.

சபாஷ் சபாஷ்!

மீண்டும் சொல்கிறேன்.

தமிழ் நாடு இ பேப்பரின் வாசகராய் 

இருப்பதற்கு என்ன தவம்

செய்தோமோ?



பி.சிவசங்கர்

கோவை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%