===============
இன்றைய (16.7.25) தமிழ்நாடு மின்னிதழ் விருந்தில் சுவைத்தவை :
உணவில் நெய்யின் குண நலன்கள் குறித்த விளக்கம், conjugated linoleik ஆசிட் ன் நன்மை சிறந்த போதனையாக அமைந்துள்ளது.
செயலற்று கிடைக்கும் "பிடி" வாரண்டுகள் பற்றி விளக்கம் கேட்கும் நீதிமன்றத்தின் கிடடுக்கிப்"பிடி" சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்வது வரவேற்புக்குரியது.
"வள்ளுவர் மறை, வைரமுத்து உரை" நூல் வெளியீடு
விமரிசனங்களுக்கு அப்பாற்பட்டு பாராட்டப்பட வேண்டிய நிகழ்வு. நூலாசிரியரின் தமிழ்ப்பணி சிறப்பானதே.
Dr.விஜயலட்சுமி குமரகுரு அவர்களின் சிறுகதையின் தலைப்பிலேயே (அதிரசமான உறவுகள்) கவித்துவம் மிளிர்கிறது. கதையை பாசிட்டிவ் அப்ரோச்சில் முடித்திருப்பது அதிரசம் தான்.
திருமிகு.பானுமதி நாச்சியார் அவர்களின் "ஊர்மிளை" தொடரில் வரும் "பெண்ணின் மனம் ஒருவனை விரும்ப ஆரம்பித்தால், அவனைப் பற்றிய தகவல்களை அறிவதில் ஆர்வமுண்டாகி, அனைத்தையும் தெரிந்து கொள்கிறது" என்ற வரியில் பெண்மையின் மனவோட்டம் அருமையாக வெளிச்சமிடப்பட்டுள்ளது. கதையோட்டத்தில் கம்பனின் சொற் சித்திரமும் கண்சிமிட்டுவதை உணரமுடிகிறது. சபாஷ். அடுத்து என்ன? எதிர்பார்ப்பு எகிறுகிறது.
திரு. இரா. இரவி அவர்களின் திருவள்ளுவர் கவிதையை, வாசுகியின் கணவர், வாசகரின் கண் - அவர் என்று சொல் நயத்தோடு முடித்துள்ளார். இது "Finis coronate opus" என்ற பொன்மொழியின் விளக்கமாக அமைந்துள்ளது அவரது கவிதையின் சிறப்பு.
திரு. தமிழழகன் அவர்களின் ஹைக்கூ வரிகள் good & high range.
அடுத்து திரு. நெல்லை குரலோன் அவர்கள். இவரது படைப்புகள் பற்றி எழுதப் புகுந்தால் அது நெடுங் காவியமாகவே மாறிப்போகும். ஆயினும் கோடி காட்டாமல் முடியாது. "சும்மா" என்ற வார்த்தையின் நாற்பரிமாணங்களையும் நயமாக எடுத்துரைத்து "அட, சும்மா அதிருதில்ல" என்று நம்மை சொல்ல வைக்கிறார். என்ன ஒரு சிந்தனைக் களம். என்ன ஒரு வார்த்தை வளம்.
அவரது கிருஷ்ணன் - ஆனி மேரி காதல் எபிசோட் நினைவு கூறல் மனதுக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. நாயகன் உடற்குறையை கடைசி வரை சொல்லாமல், இறுதியில் ட்விஸ்டோடு வெளியிட்டதில் ஒரு சிறந்த காதாசிரியராக உயர்வு பெறுகிறார். விகடனில் அவரது எழுத்துலக அனுபவமும், ஆற்றலும் அவர் மீது தனி மரியாதையை விதைக்கிறது. ராயல் சல்யூட் சார்.
உயர்வுமிகு உஷா முத்துராமன் அவர்களின் வாசகர் கடிதம் இரண்டு இடங்களில் வந்துள்ளது.
"கொண்டு போய் அறு த்த்த்திருங்கள்" என்ற வடிவேலு அவர்களின் வசனத்தை நாம் சிரித்து கடந்து விடுகிறோம். அதையே பாலியல் காமுகர்களுக்கு தண்டனையாக செக் குடியரசு, ஜெர்மனி, தேன் கொரியா, போலந்து நாடுகள் அமுல்படுத்தும் செய்தி வரவேற்கத் தக்கது. அப்படி ஒரு சட்டம் நம் நாட்டின் இன்றைய அவசியத் தேவை. அரசியலார் கவனிக்கட்டும்.
ஆனந்த பாஸ்கரில் வந்துள்ள திரு. கல்யாண்குமார் அவர்களின் சீதாயணம் அருமையான கவித்துவப் படைப்பு. வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
என்னையும் மதித்து சான்றோர்களின் சங்கப் பலகையாம் தமிழ்நாடு இ இதழில் இடமளித்த ஆசிரியக் குழுமத்திற்கும்,
வாசித்து மகிழ்ந்த (?) நல் உள்ளங்களுக்கும் என் நன்றியும்,
பாளை. கணபதி