
இன்றைய தமிழ்நாடு இ - இதழுக்கு வந்தனத்துடன் நான் வரையும் வாசகர் மடல் :
முதல் பக்கத்திலேயே முறுவலிக்கச் செய்யும் செய்தி. ஒவ்வாமையுடனே உறவு பேணும் எடப்பாடியார் ஒரு புறம், ஆட்சியில் பங்கு பெறுவோம் என்ற அமீத்ஷா அவர்களின் பேட்டி ஒரு புறம் -- சபாஷ், சரியான போட்டி.
தமிழக டி. ஜி. பி. மேற்கொள்ளும் "ஆபரேஷன் அறம்" -- காவல்துறையின் சீரிய முயற்சிகள் வெற்றி பெறட்டும்.
"பால் வேண்டாம்" சிறுகதை ஏற்கனவே வெளியானதுதான். இதழின் நான்கு பத்தி இடம் வீணாகிப் போனதே.
மூன்றெழுத்தில் பெயரை மாற்றிக்கொண்டால் வெற்றி பெறலாமாம். ஆர். ஜே. பாலாஜி ஆர். ஜே. பி. ஆகியுள்ளார். எம். ஜி. ஆர்., எஸ். எஸ். ஆர்., வி. கே. ஆர்., போன்ற சாதனையாளர்களின் வெற்றி ரகசியம் பெயரில் மட்டுமல்ல அவர்களின் திறமையில், உழைப்பில் அல்லவா இருந்தது?
வழக்கம்போல் வாசக சொந்தங்கள், காதலின் கதகதப்பையும், வாழ்க்கையின் பதை பதைப்பையும் அற்புதமாகவே கவிச் சித்திரங்களாக வரைந்துள்ளனர். குறிப்பாக அன்பர்கள் திரு. நவ்ஷத் கான், திரு. நடேஷ் கன்னாவின் எழுத்துக்கள். ரயில் விபத்து குறித்த திமிரி. ந. வீராவின் கவிதை தரத்தில் திமிறி நிற்கிறது. வேனில் ஏறி அமர்ந்த எமன், தடம் புரண்ட தண்டவாளம், படபடக்கும் நோட்டுக்கள். - அருமையான கவித்துவ சொல்லாடல்கள். Hats off..
எங்கே ஈரோடு முத்து ஆனந்த்? அவரது படைப்புகளைத் தேடினேன், காணோமே!!
ஜோதிடப் பகுதிக் கட்டுரையில்
திருமணத் தடைக்கான காரணமாக கிரகங்கள் முன்னிருத்தப் படுகின்றன. சில மனிதர்களின் பிற்போக்கு எண்ணங்களும், மற்றும் பேராசைகளும் தான் காரணம் என்பது யதார்த்தமாக உள்ளது.
ஸ்ரீ காஞ்சி சங்கராச்சாரியார் அவர்களுடன் அப்படி நெருக்கமாக பழகும் பாக்கியம் பெற்ற பெருமகன் யார் என்று தெரியவில்லை. "வாழும் காலத்தில் சவுகரியமாக வாழ" கட்டுரை ஆசிரியரின் பெயர் இல்லையே.
திரு. நடேஷ் கன்னா அவர்களின் "கேள்வி - பதில்" பகுதி யோசனையைப் பரிசீலிக்கலாமே.
உலக அரசியல் போக்கு பற்றியெல்லாம் சொல்ல எவ்வளவோ இருக்கின்றன. இடத்தின் அருமை கருதி முடித்துக் கொள்கிறேன்.
என் எழுத்துக்களுக்கு இடமளித்து ஏற்றம் தரும் தமிழ்நாடு இ இதழுக்கு இதமான நன்றிகள்.
பாளை. கணபதி.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?