வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி ),13.07.25

வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி ),13.07.25


பாகிஸ்தான் நாட்டிலுள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில்

அரசுக்கு எதிரான தீவிரவாதக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

தனிநாடு கேட்டு அவை போராடுகின்றன. அந்தக் குழுக்கள் ரயில்களையும்

பேருந்துகளையும் தாக்குவதை வழக்கமாக கொண்டிருக்கின்றன. 

இப்போது ஒரு பேருந்தை தாக்கி அதிலிருந்து ஒன்பது பேரை சுட்டுக் கொன்று இருக்கிறார்கள். 


இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகளை அனுப்புவதற்கு முனைப்பு காட்டும் பாகிஸ்தான்

தனது நாட்டில் தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளை முதலில் ஒழிக்க வேண்டும்.

    

சீர்திருத்தம் என்ற பெயரில் அமெரிக்காவில் ஒரே நாளில் 1300 அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்திருக்கிறார் அதிபர் ட்ரம்ப். இப்படிப்பட்ட மக்கள் விரோத செயல்களால் அமெரிக்க அதிபர் தனது ஆட்சிக்கு அழிவை தேடிக் கொண்டிருக்கிறார் என்பது மட்டும் நிச்சயம்.


தமிழக அரசு பணியாளர்களுக்காக குரூப் 4 தேர்வுகள் நடந்து முடிந்திருக்கின்றன. 3935

இடங்களுக்கு 13 லட்சத்து 90 ஆயிரம் பேர் பரீட்சை எழுதி இருக்கிறார்கள். தேர்வு எழுத வந்தவர்களில் சில பேர்

அரை மணி நேரம் வரை தாமதமாக வந்திருக்கின்றனர். அவர்களை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தேர்வு கூடத்துக்கு தாமதமாக வருவது என்பது மன்னிக்க முடியாத குற்றம். 


உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக நமது செஞ்சிக்கோட்டையை யுனெஸ்கோ அறிவித்திருக்கிறது. 

இத்துடன் மகாராஷ்டிராவில் இருக்கும் பல கோட்டைகளும் உலக பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.


தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும். ஆட்சியில் பாஜகவும் பங்கு பெறும் என்று அமித்ஷா பேசுகிறார். அவரது இந்த பேச்சு அதிமுகவினர் இடையே

ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. இதுவரை தமிழக முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அமித்ஷா கூறவில்லை.


பாஜகவுடன் கூட்டணி கிடையவே கிடையாது என்று கூறி வந்த அதிமுகவை ஏதோ ஒரு விஷயத்தில் நிர்பந்தப்படுத்தி பாஜகவுடன் கூட்டணி ஏற்படுத்த வைத்து விட்டனர்.


இப்போது ஆட்சியில் பங்கு பெறுவோம் என்று அவர்களாகவே கூறுகின்றனர். இதுதான் பாஜகவின் ராஜதந்திரம்.


ஒரு மாநிலத்தில் வெறும் நான்கு தொகுதிகளில் மட்டுமே ஜெயித்திருந்தால் கூட தங்களது ராஜதந்திரத்தை பயன்படுத்தி ஜெயித்திருக்கும் மற்ற கட்சிக்காரர்கள் பலரை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சி அமைக்கும் திறமை பாஜகவுக்கு கை வந்த கலை.


                   ******


வெ.ஆசைத்தம்பி 

தஞ்சாவூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%