
குமரி உத்ராவின் 'சுத்தம்' என்ற சிறுகதை, ஊரெல்லாம் சுத்தம் செய்யும் வந்தனாவின் வாழ்க்கை குப்பையாக கிடப்பதை உணர்த்தி சோகத்தில் ஆழ்த்தியது. படித்து முடித்ததும் நெடுநேரம் உள்ளம் ஒருவித சோகத்தில் ஆழ்ந்திருந்தது.
தமிழ்ச் செம்மல் நன்னிலம் இளங்கோவனின் 'பால் வேண்டாம்...!' என்ற சிறுகதையை படித்தபோது, அந்த பால் வாங்கும் வீட்டுக்காரம்மா சொல்வது மிகச்சரியானதாகதான் தோன்றியது. இந்த காலத்தில் நகரத்தில் மாடு வளர்பவர்கள் மாடுகளுக்கு தீவனம் எதுவும் போடாமல் கண்டபடி சாலையில் அலையவிட்டுதான் வளர்க்கிறார்கள் என்பது யாரும் மறுக்கமுடியாத உண்மை.
கவி. வெண்ணிலவனின் 'காதலின் பொன்வீதியில்...' சூழ்ச்சி, சதித்திட்டங்களையெல்லாம் முறியடித்து விட்டு, இப்போது திருமணம், உறவுகள், சொந்த கிராமம் என்றெல்லாம் செல்வது மகிழ்ச்சியை தருகிறது. இந்த நாவலாசிரியர் இந்த நாவல் நிறைவடைந்தவுடன் இதை புத்தகமாக வெளியிட்டால், இன்னும் பல வாசகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும்.
'ஜமதக்னி' பிரபல எழுத்தாளர் கார்ல் மார்க்ஸின் மூலதனம் நாவலை தமிழில் மொழிப்பெயர்த்தவர் என்பது மட்டும்தான் எனக்குத் தெரிந்திருந்தது. அவர் மிகச் சிறந்த எழுத்தாளராக இருந்ததுடன், சுதந்திரப் போராட்ட வீரராக ஒன்பது ஆண்டுகள் சிறைவாசம் இருந்தவர், சாகித்திய அகாதமி பரிசுப் பெற்றவர், தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி போன்ற மொழிகளில் புலமை மிக்கவர் என்பது போன்ற பல பெருமைக்குரிய தகவல்களை தமிழ்நாடு இ.பேப்பர் மூலம்தான் அறிந்தேன். உண்மையிலேயே வியப்பாக இருந்தது.
நெல்லை குரலோனின் 'கைக்குட்டை ரகசியம்' என்ற கவிதை மனிதனை மனிதனாக மதிக்கும் நாகரிகத்தை போதிக்கும் நல்லதொரு பாடமாக உயர்வாக இருந்தது.ஒரு நல்ல கவிதை எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு இந்த கவிதையே ஒரு நல்ல உதாரணம்.
-சின்னஞ்சிறுகோபு,
சிகாகோ.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?