மகளிர் டி20 உலகக் கோப்பை: பயிற்சி ஆட்டங்களுக்கான இடங்கள் அறிவிப்பு!
Jul 11 2025
82

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெறும் இடங்களை ஐசிசி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி தொடங்கும் இந்த டி20 உலகக் கோப்பைத் தொடர் ஜூலை 5 வரை நடைபெறுகிறது. ஜூலை 5 ஆம் தேதி இறுதிப்போட்டி லார்ட்ஸ் திடலில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெறும் மூன்று இடங்களை ஐசிசி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கார்டிஃபில் உள்ள சோஃபியா கார்டன்ஸ், டெர்பி கவுன்ட்டி திடல் மற்றும் லோபாரோ பல்கலைக்கழகம் ஆகிய மூன்று இடங்களிலும் பயிற்சி ஆட்டங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி ஆட்டங்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளபோதிலும், போட்டிக்கான அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
24 நாள்கள் நடைபெறவுள்ள இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் 33 போட்டிகள் நடைபெறவுள்ளன. மொத்தம் 12 அணிகள் பங்கேற்று, இங்கிலாந்து முழுவதும் 7 இடங்களில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?