
லோக்சபாவில் எதிர்க்கட்சிகள்
அமளி. பவர் பாண்டி கட்டுரை
சரியான விழிப்புணர்வு கட்டுரையாக
இருந்தது. பாகிஸ்தான் போரை
நிறுத்தியது ஏன் என ராஜ்நாத்சிங்
விளக்கம். பயங்கரவாதிகள் தான்
பாகிஸ்தானில் இருந்து வந்தார்கள்
என்பதை எப்படி நம்புவது என
சிதம்பரம் கேள்வி. அன்புமணி
காஞ்சிபுரத்தில் நடை பயணம்
மேற்கொண்டார். தற்போது
நடைபயணம் என்பது பேஷன்
ஆகிவிட்டது. வறுமை ஒழிப்பில்
தமிழகம் முன்னோடியாக உள்ளது.
ஊட்டி அரசு பூங்காவில் நடன மங்கை
ஆர்கிட் மலர்கள் வரவேற்பு.
முத்து ஆனந்த் அவர்களின்
காதல் கவிதை ஒரு காதல் எபிசோடு.
சமையலறை குறிப்புகள் அனைத்தும்
பயனுள்ளதாக இருந்தது.
2152 கோடி நிதியை மத்திய அரசு
விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு
கோரிக்கை வைத்துள்ளது.
ரயில் நிலையத்தில் பத்து நிமிடம்
ரயில்களை நிறுத்தினால் உடனடியாக
கழிவறைகளில் சுத்தம் செய்ய
வேண்டும். ரயில்வே நிர்வாகம்
அறிவிப்பு. மேட்டூர் அணையில்
இருந்து ஒரு லட்சம் கன அடி நீர்
திறந்து வைக்கப்பட்டது. திருச்சி
விமான நிலையத்தில்
சொகுசு அறைகள் திறந்து
வைக்கப்பட்டது. உத்தரப்பிரதேச
கோவில்களில் குரங்குகள் அட்டகாசம்
அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில்
மகளிர் உரிமைத்தகையை
14000 ஆண்கள் பெற்றுள்ளனர்.
ஒருவேளை பெண் வேஷம் போட்டு
உரிமை தொகை பெற்று
இருப்பார்கள் என நினைக்கிறேன்.
ஹரித்துவார் மானச தேவி கோவிலில்
கூட்ட நெரிசல். காசா போரினால்
காசாவில் கடுமையான உணவு பஞ்சம்
ஏற்பட்டுள்ளது. தினமும் 10 மணி நேரம்
சண்டையை நிறுத்தி வைக்க
இஸ்ரேல் முடிவு.. தினசரி உலகில்
எங்காவது ஒரு இடத்தில்
போர் நடந்து கொண்டு தான்
இருக்கிறது. தினசரி செய்திகளை
உடனுக்குடன் சுடச்சுட தமிழ்நாடு
இ பேப்பர் வழங்கி வருவது
மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ்நாடு
இ பேப்பர் குடும்பத்தினருக்கு
வாழ்த்துக்களை தெரிவித்துக்
கொள்கிறேன். இன்றைய தினம்
கவிதைகள் கட்டுரைகள்
அனைத்தும் சிறப்பாக இருந்தது.
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?