அன்போடு வந்தால் அரவணைப்போம் என ஸ்டாலின் கூறியுள்ளார்
பாஜக தலைவராக நிதின் நபின்
நியமனம். எஞ்சின் இல்லாத கார் அதிமுக என உதயநிதி கூறியுள்ளார்
ரயிலில் கடத்திவரப்பட்ட 44 கிலோ கஞ்சா பறிமுதல செய்யப்பட்டது.
ஆறு மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு. தமிழகத்தில் குழந்தை பிறப்பு 18 சதவீதம் சரிவு.
ஊட்டியில் கடும் குளிர் நிலவி வருகிறது. வேம்பு பலன்கள் பற்றிய கட்டுரை நல்ல பயனுள்ள தகவல்.
சூரிய நமஸ்காரம் பற்றிய கட்டுரை புதுமையாக இருந்தது . புதுச்சேரியில் மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. கூடன்குளம் அணு உலைக்கு ரஷ்யா யுரேனியத்தை அனுப்பி வைத்தது. விஜய் நடத்தும் ஈரோடு கூட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கினார். 100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம் செய்யப்பட்டது . நாட்டில் டிஜிட்டல் கைது அதிகமாகி உள்ளது.
இந்திய ரூபாய் நோட்டுக்களை
மீண்டும் அனுமதிக்க நேபாளம் முடிவு செய்துள்ளது.
சின்னஞ்சிறு கோபு அவர்களின்
வீட்டு நூலகம் கவிதை மிகவும் சிறப்பாக இருந்தது.
காதல் கவியரசு வேலூர் முத்து ஆனந்த் அவர்களின் கவிதை வரிக்கு வரி அற்புதமாக இருந்தது. இருவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.
வழக்கம்போல கவிதைகள் கட்டுரைகள் ஆன்மீக செய்திகள் சுற்றுலா செய்திகள் சிறுவர் பகுதி
என அனைத்து அம்சங்களும் சிறப்பாக இருந்தது.
தமிழ்நாடு இ பேப்பர் குடும்பத்திற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?