வந்தே மாதரம் பாடல் 150வது ஆண்டு
விழா கொண்டாட்டம் நடைபெற்றது .
எந்த கொம்பனாலும் திமுகவை
தொட்டுப் பார்க்க முடியாது என
ஸ்டாலின் அறிக்கை. திமுகவின் 75
அறிவுத் திருவிழா கொண்டாடப்பட்டது
கரூர் சம்பவம் யாரும் செய்யாத
பித்தலாட்டம் என வைகோ காட்டம்.
பத்தாயிரம் கோடி நன்கொடை
வழங்கிய தொழிலதிபர்கள்
பட்டியலில் சிவ நாடார் முதலிடம்.
பாம்பன் மீனவர்கள் சிக்கிய
வலையில் இரண்டு கூறல் மீன்கள்
சிக்கியது. ஒரு லட்சத்து 65 ஆயிரம்
ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது
ஓசூரில் பெண்கள் விடுதியில்
குளியலறையில் ரகசிய கேமரா
வைத்த இளம்பெண் கைது.
மின்சார பஸ் டிரைவர்கள் திடீர்
ஸ்ட்ரைக் செய்தனர். யோகங்களும்
அதன் பலன்களும் கட்டுரை
அருமையாக இருந்தது. மூளையை
உண்ணும் அமீபா கட்டுரை
பயனுள்ள தகவல். காஞ்சிபுரம்
வரதராஜ பெருமாள் கோவிலில்
உள்ள தங்க பல்லிகள் காணாமல்
போய்விட்டதாக புகார். வாக்கு
வங்கிக்காக ராமரை
வெறுக்கிறார்கள் என மோடி
குற்றச்சாட்டு. 88 லட்சம் கோடி
ஊதியமாக பெறும் எலன் மாஸ்க்.
அடுத்த ஆண்டு ட்ரம்பு இந்தியா
வருகிறார். புதுக்கவிதைகள்
அனைத்தும் அபாரமாக உள்ளது.
நடிப்பில் தான் நவரசம் என
கேள்விப்பட்டு இருக்கிறோம்.
ஆனால் கவிதையிலும் நவரசத்தை
கொண்டு வருகிறார் நம் காதல்
மன்னன் நவரச நாயகன் முத்து
ஆனந்த். அவர்கள். காதல் கவிதையை
நவரசங்களிலும் எழுத முடியும்
என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார்
பாராட்டுக்கள். தினசரி எல்லோருக்கும்
படைப்புகள் வழங்கி
சந்தோஷப்படுத்தும் தமிழ்நாடு
இ பேப்பர் குடும்பத்திற்கு
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?