
முகில் தினகரனின் 'தந்தையின் மகள்' என்ற சிறுகதையில் சுகந்தி கம்பீரமாக உயர்ந்து நிற்கிறாள். புலிக்கு பிறந்தது பூனையாகாது என்பது போல நியாய உள்ளம் படைத்த ராகவனின் மகள் சுகந்தியும் நியாயவாதியாக இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. எப்போதுமே சிறந்த சிறுகதைகள் தருவதில் மகாவல்லவர் என்றால் அது நம்ம முகில் தினகரன்தான்!
எப்போதுமே ஹரணியின் கதை என்றாலே நம்பிக்கையுடன் படிப்பேன். அது எப்போதுமே சிறந்த சிறுகதையாக ஏதாவது ஒருவகையில் வித்தியாசமாகதான் இருக்கும்.
'பாரதி நகர் காமராஜ் நகர் விரிவாக்கம்' சிறுகதையும் அப்படிதான் சிறப்பாக இருந்தது.
ஒரு காலத்தில் காசியாத்திரை என்பது நடைப் பயணமாக மாதக் கணக்கில் தொடர்வதாக இருந்தது. இப்போது காசிக்கு செல்வதென்றால் ரயிலிலும் விமானத்திலும் விரைவில் சென்று வந்து விடுகிறார்கள். கோமளவல்லியின் காசி யாத்திரை கட்டுரையை படித்தபோது, எனக்கும் ஒரு தடவை காசிக்கு போக வேண்டுமென்ற ஆசை வந்திருக்கிறது.
'சிவ தகவல்கள்-50' என்ற ப.கோபி பச்சமுத்துவின் தொகுப்பு ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அத்தனை தகவல்களும் ஆன்மிக அற்புதமாக இருந்தது. இது மிக சிறப்பான பாராட்ட வேண்டிய தொகுப்பாக மிளிர்கிறது.
'சேதுபதி தஞ்சிராயர்' வரலாறை படித்தபோது, சுதந்திரத்திற்காக எப்படியெல்லாம் பாடுபட்டு பலர் தங்களது வாழ்க்கையை இழந்திருக்கிறார்கள் என்பது தெள்ளத்தெளிவாக புரிகிறது. சேதுபதி தஞ்சிராயர் தமது 48 ஆண்டுகால வாழ்நாளில் 24 ஆண்டுகளைச் சிறையிலேயே கழித்தார் என்பது எவ்வளவு கொடுமையென்பதை நினைக்கும்போது மனது துயரத்தில் ஆழ்ந்துப்போகிறது.
கவிஞர் இரா.இரவியின் படத்திற்கு ஹைக்கூ கவிதைகள் நான்கும் மிகச் சிறப்பாக இருந்தது. படங்களும் கவிதைகளும் ஒன்றினைந்து அப்படியே மனதில் மறக்கமுடியாதபடி நிற்கிறது.
-சின்னஞ்சிறுகோபு,
சிகாகோ.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?