
மைதா உணவுகளை எடுத்துக்கொள்வதால் உடலில் ஏற்படும் 5 பிரச்னைகள் என்ற நலம் தரும் மருத்துவக் குறிப்பை படித்தேன். மைதா என்பது கோதுமையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு இரசாயனப்பொருட்கள் கலந்து வெண்மை நிறமாக்கப்பட்ட ஒருவகை பவுடர் என்பதையும் அறிந்தேன். இதனால் மைதாவால் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் மனித உடலுக்குள் சென்று தேவையற்ற பல உடல் பிரச்சனைகளை உருவாக்கிறது என்பதை படித்தபோது, இனி கூடுமானவரை மைதாவால் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை தவிர்ப்பது என்று முடிவு செய்துவிட்டேன். இதைப்போன்ற தமிழ்நாடு இ.பேப்பரின் மருத்துவ அறிவுரைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
வே.கல்யாண்குமாரின் 'கோவில் சிலைகள்' என்ற சிறுகதை காதலின் வலிமையை உணர்த்தியது. ஆனாலும் திடீரென்று மனம் மாறி, இன்னொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகி, கடைசி நேரத்தில் மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது சரிதானாயென்பதையும் அந்த காதலன் எண்ணிப்பார்க்க வேண்டும்!
கவி வெண்ணிலவனின் 'காதலின் பொன்வீதியில்...' தொடகதை மிக அழகாக நிறைவு பெற்றிருக்கிறது. பொல்லாதவர்களின் வஞ்சகம், பழிவாங்கும் திட்டத்தையெல்லாம் முறியடித்து, நாவல் திருமணத்தில் குதூகலமாக முடிந்த விதம் உள்ளத்தை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. இந்த சிறப்பான நாவல் புத்தகமாக வெளிவரவேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன். அதோடு இந்த கதாசிரியரின் அடுத்த நாவலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
கீழப்பாவூர் நரசிம்மர் என்ற 1100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவிலைப்பற்றி படித்தேன். நடேஷ் கன்னா இந்த கோவிலைப்பற்றி விபரமாக எழுதியிருந்தது மகிழ்ச்சியை தந்தது. இந்த கோயிலில் தினசரி மாலை வேளையில் நரசிம்மருக்கு இளநீர் அபிஷேகம் செய்து அவரது கோபத்தை இன்னும் தனித்து வருகிறார்கள் என்ற தகவல் வியப்பை தந்தது.
'காற்றில் கலந்த ஓவியம்' என்ற சமீபத்தில் மறைந்த நடிகை சரோஜாதேவியை பற்றிய கவிதை, என்னை மலரும் நினைவுகளில் ஆழ்த்தியது. கவிஞர் பரிபூரணனின் நடிகை சரோஜாதேவியை பற்றிய நிறைய தகவல்களை இந்த கவிதையில் சொல்லியிருப்பது மகிழ்ச்சியை தருகிறது.
-சின்னஞ்சிறுகோபு,
சிகாகோ.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?