
ஆசிரியர் : சுதா விஜய்
வெளியீடு : பேக்கிடெர்ம் டேல்ஸ் நிறுவனம் (Pachyderm tales)
விலை :ரூ 120
இந்தப் புத்தகத்தில் 32 கட்டுரைகள் மூலமாக , நூலாசிரியர் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை, மிகச் சிறந்த முறையில், வாசிப்போரின் ஆர்வம் குன்றாத வகையில் எழுதி உள்ளார்.
முதல் கட்டுரையே அன்பில் இருந்து ஆரம்பிக்கிறார்.
முதல் வரியிலேயே 'நான் நானாகவே இருக்க விரும்புகிறேன் ' என்று ஆரம்பித்து அவரைப் பற்றி சிந்திக்க வைத்துள்ளார்.
சிறு வயதில் அவர் செய்த சேட்டையில் ஆரம்பித்து, பள்ளியில் நடந்த பல நிகழ்வுகளைப் பட்டியல் இட்டுள்ளார்.
'காதலிக்க நேரமில்லை/காதலிக்க யாருமில்லை ' அத்தியாயத்தில் அவருடைய மனதில் ஏற்பட்ட உணர்வுகளை நகைச்சுவையோடு எழுதி உள்ளார்.
'ஆட்டோகிராப்' என்ற தலைப்பில் நான்கு அத்தியாயங்கள். படிக்கும் ஒவ்வொருவருக்கும் தங்கள் பள்ளி நாட்களை நினைவு படுத்தும் என்பது நிச்சயம்.
ஒவ்வொரு அத்தியாயமும் அவருடைய ஞாபக சக்தியை பறைச்சாற்றி நம்மை வியக்க வைக்கிறது.
அனைத்தும் அனுபவ பாடம். திகட்டாத தெள்ளமுது. அவருடைய கடவுளைப் பற்றிய கட்டுரை அவரது முதிர்ச்சியை உணர வைக்கிறது.
குடும்பம், காதல், நட்பு அனைத்தையும் தன் அனுபவத்தில் உணர்ந்து எழுதிய ஒரு தொகுப்பு இந்த நூல்.
அவரது முயற்சியால் விளைந்த இந் நூல் நமது படிப்பனுபவத்திற்கு மிகப்பெரிய விருந்து. மேலும் இதுபோல பல நூல்களை சுதா விஜய் அவர்கள் படைக்க என் உளமார்ந்த வாழ்த்துக்கள் .....
-ருக்மணி வெங்கட்ராமன்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?