வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 24.08.25

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 24.08.25


அன்புடையீர் 


வணக்கம் 24/8/25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர். காம் என்ற நாளிதழில் முதல் பக்கத்தில் வந்த நிதி வழங்காமல் குறுகிய அரசியல் நோக்குடன் செயல்படும் மத்திய அரசு என்ற நம் தமிழக முதல்வர் அவர்களின் பேச்சைக் கேட்டு அரசியலை புரிந்து கொண்டேன் இன்றைய பஞ்சாங்கம் நல்ல நாளாக அமைய எனக்கு உதவியது மனமார்ந்த பாராட்டுக்கள்.


நாளை முதல் அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை நிறுத்தம் என்று இந்தியா அறிவித்ததை படித்ததும் அதிர்ச்சியாக இருந்தது. திருக்குறள் மிக அருமையான திருக்குறளாக பொருளுடன் ரசித்து படிக்க வைத்தது மனமார்ந்த பாராட்டுக்கள் .


நம் உடலில் யூரிக் அமிலம் அதிகமானால் பல இன்னல்கள் வரும் என்பதால் அந்த யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த இந்த ஒரு காய் போதும் எப்படி எப்போது சாப்பிடுவது என்று பாகற்காயை பற்றி மிக அருமையான தகவலை சொன்னது பாகற்காய் கசந்தாலும் திதிப்பான செய்தியாக ஆர்வமுடன் படித்து ஆரோக்கியமாக வாழ உதவியது.


மக்கள் நல்வாழ்வுத் துறையில் 644 பேருக்கு பணி நியமன என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வழங்கிய அந்த செய்தி மிக அருமையான தகவல் மனமார்ந்த பாராட்டுக்கள்


தினம் ஒரு தலைவர்கள் பகுதி எம் .டி. ராமநாதன் அவர்களின் வரலாறும் அவருடைய கருப்பு வெள்ளை புகைப்படமும் அவரைப் பற்றி நன்றாக அறிந்து கொள்ள உதவியது வரலாற்றுச் செய்தியை ஆவலுடன் படித்ததால் மனதுக்குள் ஒரு உற்சாகம் வந்தது.


அறுசுவைக் களஞ்சியம் பகுதி மிகவும் அருமை பீமன் ரெடியாகி விட்டார் என்ற செய்தியை படித்தது அந்த இடத்திற்கே நான் சென்று நேரில் பார்ப்பது போல ஒரு மன நிறைவும் சந்தோஷமும் வந்தது.


ஜோதிடம் அறிவோம் மிகவும் அருமையான தகவல்கள் எந்த திசையில் துளசி செடி நட வேண்டும் என்று சொன்னது ஆன்மீக செய்தியாகவும் மனதிற்கு மகிழ்ச்சியாகவும் ஆன்மீகத்தின் மீது மேலும் ஆர்வத்தையும் வரவழைத்தது.


ஓம் சக்தி கஞ்சி விழாவில் உற்சவர் தேரில் பவனி வந்தார் என்ற செய்தி போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள நாகரசம்பட்டி கிராமத்திற்கே என அழைத்துச் சென்று விட்டது. ஆவணி திருவிழா தேரோட்டம் என்று திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணி திருவிழா தேர் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் வரவழைத்தது .


சுற்றுலா பக்கத்தில் வந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்ததால் முக்கொம்பு என் நினைவுக்குள் வந்து நான் அங்கு சென்றதை உற்சாகத்துடன் நினைக்க வைத்தது. இன்றைய ராசிபலன் மிகவும் அற்புதமாக இந்த வாரம் எப்படி இருக்கும் என்று சொன்னது


கிரைம் கார்னர் அங்கு எங்கு என்ன எப்படி நடக்கிறது என்று மிக தெளிவாகவும் அருமையாகவும் விளக்கி சொன்னது ஒரு விழிப்புணர்வு செய்தியாக உணர்ந்தேன். விளையாட்டு செய்திகள் மிகவும் அருமை அதை படிக்கும் போது சிறு பிள்ளை போல ஆவலுடன் படித்து ரசித்தேன் .


இலங்கை முன்னாள் அதிபர் ரனில் விக்ரமசிங்கே கைது என்ற செய்தி அயல்நாட்டில் நடக்கும் அரசியலில் மிக தெளிவாக உணர்ந்து கொள்ள உதவியது. மேற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக காசாவில் உணவு பஞ்சம் என்ற செய்தி வருத்தமாக இருந்தது.


ஞாயிறு சூரியனுக்கு ஓய்வு இல்லை போல தமிழ்நாடு இ பேப்பருக்கும் ஓய்வில்லை என்று மிக அருமையான தகவல்களை விடியற்காலையிலேயே எங்களுக்கு படிப்பதற்கு ஒரு அறுசுவை விருந்தாக அளித்த தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.


 நன்றி 

உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%