வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் த.வெ.க. கண்டன ஆர்ப்பாட்டம்
Nov 17 2025
12
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் நடைபெறும், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கு, த.வெ.க.,வும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இதற்காக, தமிழகம் முழுதும், த.வெ.க., சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தலைவர் விஜய் அறிவித்தார். சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிராக தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டத்தில் பலத்தை காட்ட வேண்டும்' என, கட்சியினருக்கு த.வெ.க., தலைவர் விஜய் நேற்று உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய் உத்தரவின்பேரில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதலின் பேரில் இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை சிவானந்தா சாலையில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்கள் பங்கேற்றனர்.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், SIR நடவடிக்கையில் குளறுபடிகள் இருப்பதாகக் கூறி கணடன கோஷங்களை எழுப்பினர்.
சென்னையை தவிர தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்காணவர்கள் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?