வலங்கைமானில் ஸ்ரீ கைலாசநாதர் கோவில், ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோவில்களில் தேய் பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவர் சிறப்பு வழிபாடு
வலங்கைமானில் ஸ்ரீ கைலாசநாதர் கோவில், ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோவில்களில் தேய் பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவர் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ பெரிய நாயகி சமேத ஶ்ரீ கைலாசநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவர் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனையொட்டி கால பைரவருக்கு சிறப்பு சிறப்பு ஹோமம், அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் செய்து மகா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு அருட் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இதேபோல் ஸ்ரீ தையல் நாயகி சமேத ஶ்ரீ வைத்தீஸ்வர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவர் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனையொட்டி கால பைரவருக்கு சிறப்பு ஹோமம், அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள், தீபாராதனை நடைபெற்று கால பைரவருக்கு வெள்ளி கவசம் சாற்றப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு அருட் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?