வன்முறையை தூண்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டால் கடும் நடவடிக்கை: சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை

வன்முறையை தூண்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டால் கடும் நடவடிக்கை: சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை

சென்னை:

வன்முறையை தூண்டும் வகையில் ரீல்ஸ்கள் வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் எச்சரித்துள்ளார்.


சமூக வலைதளங்களான வாட்ஸ்-அப், பேஸ் ஃபுக், ட்விட்டர் (எக்ஸ்) போன்றவற்றை விட இன்ஸ்டா கிராம் அதிக பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டுள்ளன. இதில், பலர் தங்களது நிறைமைகளை நிரூபிக்கும் வகையில் நடித்து வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், பல வீடியோக்கள் எல்லை மீறுவதால் எதிர்ப்புகளையும் எதிர்கொள்கிறது. குறிப்பாக அண்மை காலமாக குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை பெருமைபடுத்தும் வகையிலும், ஊக்கப்படுத்தும் வகையிலும் ரீல்ஸ்கள் வெளியாகின்றன.


மேலும், வன்முறையை தூண்டும் வகையில் ரீல்ஸ்கள், புகைப்படங்கள் அதிகம் பகிரப்படுகின்றன. இது சமூகத்தில் எதிர்வினையை ஏற்படும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிகையும் வலுத்தது. இந்நிலையில், வன்முறையை தூண்டும் வகையிலான ரீல்ஸ்களை தடுக்க கட்டுப்பாடுகள் கோரி விரைவில் இன்ஸ்டா கிராம் நிறுவனத்துக்கு சென்னை காவல்துறை சார்பில் கடிதம் எழுத உள்ளதாக காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.


மேலும், வன்முறையை தூண்டும் வகையிலோ, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை ஊக்குவிக்கும் வகையில் செயல் படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%