வண்டலூர் உயிரியல் பூங்கா: 10 குட்டிகளை ஈன்ற அனகோண்டா பாம்பு
Jul 17 2025
10

சென்னை,
சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகின்றன. இதனை தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர்.
கடந்த 2020-ம் ஆண்டு விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் சென்னை முதலை பண்ணையில் இருந்து ஒரு ஜோடி மஞ்சள் அனகோண்டா பாம்பு வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வழங்கப்பட்டது. அந்த பாம்புகளை பூங்கா நிர்வாகம் தனியாக கண்ணாடி கூண்டில் அடைத்து பராமரித்து வருகிறது.
பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த மஞ்சள் அனகோண்டா பாம்பு ஒன்று நேற்று முன்தினம் 10 குட்டிகளை ஈன்றது. இதை பார்த்து மகிழ்ச்சி அடைந்த பூங்கா ஊழியர்கள் உடனடியாக பூங்கா நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து 10 மஞ்சள் அனகோண்டா பாம்பு குட்டிகளையும், தாய் பாம்பிடம் இருந்து தனியாக பிரித்து அதனை ஒரு கூண்டில் வைத்து ஊழியர்கள் பராமரித்து வருகின்றனர். இந்த மஞ்சள் நிற அனகோண்டா பாம்புகள் 6 முதல் 7 அடி வரை வளரக்கூடியது.
அனகோண்டா பாம்புகளுக்கு கோழி குஞ்சுகள் இறைச்சியாக வழங்கப்படுகிறது. புதிதாக பிறந்த அனகோண்டா பாம்பு குட்டிகள் நல்ல நிலையில் முதிர்ச்சி அடைந்த பிறகு பொதுமக்கள் பார்வைக்காக விடப்படும் என்று பூங்கா அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?