லால்குடியில் ரூ.24.04 கோடியில் புதிய பேருந்து நிலையம்: நகராட்சி நிர்வாக இயக்குநர் ஆய்வு
Dec 30 2025
13
திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி நகராட்சியில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.24.04 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் மற்றும் நகராட்சி அலுவலகக் கட்டிடப் பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர் ப.மதுசூதன் ரெட்டி, மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைவா கவும், தரமாகவும் முடிக்க அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
திருச்சி - அரியலூர் மாநில நெடுஞ்சாலையின் மையப்ப குதியாக விளங்கும் லால்குடி நகராட்சியைச் சுற்றி சுமார் 25 கிராமங்கள் உள்ளன. தற்போதுள்ள பேருந்து நிலையத்தில் இடவசதி இல்லாததால் புறநகர் பேருந்துகள் நிலையத் திற்குள் வராமல் வெளிவழியாகச் செல்கின்றன. இதனால் பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் களை யவும், நகராட்சியின் வருவா யைப் பெருக்கவும் 5.32 ஏக்கர் பரப்பளவில் இந்தப் புதிய பேருந்து நிலையம் அமைக் கப்பட்டு வருகிறது.
இதில் 40 பேருந்து நிறுத் தங்கள், 120 கடைகள், 2 உணவகங்கள், ஏடிஎம் மையங்கள் மற்றும் ஓட்டுநர் தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளும் இடம்பெறவுள்ளன. இத்திட்டத்திற்கு கடந்த நவம்பர் 21-ஆம் தேதி நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டிப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, 6-வது மாநில நிதி ஆணையச் சிறப்பு நிதியின் கீழ் ரூ.4.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய நகராட்சி அலுவலகக் கட்டிடப் பணிகளையும் இயக்குநர் ஆய்வு செய்தார். தற்போதுள்ள அலுவலகம் வெறும் 1000 சதுர அடியில் மட்டுமே இயங்கி வரும் நிலையில், எதிர்காலத் தேவையைக் கருத்தில்கொண்டு 7000 சதுரடி பரப்பளவில் இந்த புதிய வளாகம் அமைக் கப்பட்டு வருகிறது.
இந்த ஆய்வின் போது, நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குநர் தாணுமூர்த்தி, செயற்பொறியாளர் மாதவன், லால்குடி நகர்மன்றத் தலைவர் துரை மாணிக்கம், ஆணையர் மா.புகேந்திரி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?