
ராமேசுவரம், ஜூலை 20-
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆடித்திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் நேற்று காலை தொடங்கியது. ஆகஸ்ட் 4-ம் தேதி வரை 17நாள் இந்த விழா நடக்கிறது.
ஆடித் திருக்கல்யாண விழாவின் முதல் நாளான நேற்று அதிகாலை 4 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை நடந்தது. சாயரட்சை பூஜை, கால பூஜைகளுக்கு பிறகு ராமேசுவரம் கோயில் யானை ராமலட்சுமி நான்கு ரத வீதிகளில் கொடியுடன் வலம் வந்தது. காலை 10.30 மணிக்கு மேல் பர்வதவர்த்தினி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் நவசக்தி மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து அம்பாள் மண்டபத்தில் உள்ள தங்கக்கொடி மரத்தில் கன்னி லக்னத்தில் வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க கொடியேற்றப்பட்டது.
அதன் பின்னர் ஆடித் திருக்கல்யாணத் திருவிழா தொடங்கியது. இரவு 8 மணியளவில் நாயகர் வாசலில் தீபாராதனை முடிந்து பர்வதவர்த்தினி அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்தில் எழுந்தருளினார். ஜூலை 24-ம் தேதி ஆடி அமாவாசை, ஜூலை 27-ம் தேதி தேரோட்டம், ஜூலை 29-ம் தேதி ஆடிதபசு, ஜூலை 30-ம் தேதி திருக்கல்யாணம், ஆகஸ்ட் 4-ம் தேதி கெந்தனமாதன பர்வத மண்டகப்படிக்கு எழுந்தருளல் நடைபெறும் என கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?