ரவுடி கொலை வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை
Sep 17 2025
63
அரியலூர், செப். 15-
அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்த புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பூச்சி என்கிற சுதாகர்(37). ரவுடியான இவருக்கும், குலமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர்(40) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்த நிலையில், கடந்த 10.9. 2023 அன்று பாஸ்கர், தனது நண்பரான கண்டராதித்தம் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுன்(42) என்பவருடன் சேர்ந்து சுதாகரை வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து திருமானூர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து, பாஸ்கர், அர்ஜுன் ஆகிய இருவரை கைது செய்தனர். வழக்கை விசாரித்து வந்த அரியலூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மலர்வாலண்டியா, குற்றவாளிகள் பாஸ்கர் மற்றும் அர்ஜுனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?