
சொற்கள்
எப்படி எல்லாம்
வளைந்து
நெளிந்தாடுகின்றன
நதியாய் நாகமாய்
நிமிர்ந்தோர் முன்
குனிந்தும்
குனிந்தோர் முன்
நிமிர்ந்தும்
அதிகாரத்தின்
கால்களை பிடித்தபடியும்
ஏதிலிகளின்
கழுத்தை நெறித்தபடியும்
ஆடம்பர அங்காடிகளில்
பவிசாகவும்
சாலையோர வியாபாரிகளிடம்
பேரம் பேசியும்
கடவுள் முன்
யாசகம் கேட்டும்
யாசகர் முன்
கடவுளாகவும்
பச்சோந்தியாய்
பல நிறம் காட்டித் தான்
தன் இருப்பை
தக்க வைக்கின்றன
சமூகநீதி சமத்துவம்
பேசுவோர் முன்னும்
சமமற்ற சொற்களின்
அதிகாரம் கண்டுதான்
அயர்ச்சி கொள்கிறேன்.
உலகம்
பாவனை மிகுந்ததுதான்
பாவனை மிகுந்தோர்
புனையும்
சொற்களின் பாவனைகள்தான்
தீரவியலாத
துயரைத் தந்தலைகிறது
செ. தமிழ்ராஜ்
வண்டியூர்
மதுரை
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?