
அவர்களிருவருமாய்
என் முன் வந்து சிரித்தார்கள்.
பதிலுக்கு நானும் சிரித்தேன்.
அவர்களைப்போலவே கையெடுத்துக்கும்பிட்டு,,,!
அவர்களின் சிரிப்பில் மிதமிஞ்சிய அன்பும்,
உயர் வாஞ்சையும் மட்டுமே ஒட்டி இருந்தது,,,!
அவர்களிருவரும் முதுமையை அணிந்திருந்தார்கள்.
அவர்களிருவருக்கும் அது
பிடித்ததால் அல்ல.
கூடிப்போன வயதும். ஏறிப்போன மூப்பும்
உடல் போர்த்திக்கொண்ட தள்ளாமையும் அவர்களிடமிருந்த இளமையைக்கழட்டிவிட்டு முதுமையை அணிவித்திருந்தது.
அவர்களால் துரிதம் கொண்டு நடக்க இயலவில்லை.
கூர்மையான பார்வை அவர்கள் கண்ணுக்கெட்டாத தூரத்தில்,,,!
கவனமுற்று கேட்க அவர்கள் ஆசைகொண்டாலும் முடியவில்லை.
மெல்லிய குரல்தான் அவர்களுக்கான சாஸ்வதமாய் இக்கணம் வரை!
இருவரும் கணவன் மனைவிதான் என்பதை அவர்களது
நெருக்கமும்
அந்நியோன்யமும் முன்னறிவித்துச்சென்றது.
நாங்களிருவரும் தனியாய்த்தான் இருக்கிறோம்.
இப்பொழுதும் தனியாய்த்தான் இங்கு வந்திருக்கிறோம் என வந்ததின் நோக்கம் தெரிவிக்கிறார்கள்.
இனி இங்கு வரவேண்டாம் தங்களின் தேவை வேண்டி,,,!
தங்களின் தேவையை பூர்த்தி செய்ய நாங்களிருக்கிறோம்.
அது இனி தங்கள் இல்லம் தேடி வரும்.
போய் வாருங்கள்
கவலை கொள்ளாது எனச்சொன்ன போது தனியாகவே வசித்து தனியாகவே வந்து செல்கிற நாங்கள் யாரை விடுத்து யார் தனியாகச்செல்லப்
போகிறோமோ என்றபடி குரல் தளுதளுக்கச் செல்கிறார்கள்.
விமலன்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?