news Breaking News
clock

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு; பயணங்களை தவிர்க்க குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு; பயணங்களை தவிர்க்க குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை


 

இஸ்லாமாபாத்,


பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இமாம்கார் நகரில் தர்லாய் கலான் பகுதியில் உள்ள ஷியா பிரிவு மசூதி ஒன்றில் மக்கள் தொழுகையில் ஈடுபட்டு இருந்தபோது, தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 31 பேர் பலியானார்கள். 169 பேர் காயமடைந்தனர்.


இந்நிலையில், பாகிஸ்தானில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட செய்தியில், பாகிஸ்தானுக்கு பயணிக்கும் அல்லது பாகிஸ்தானில் வசிக்கும் அமெரிக்கர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.


 பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்க்கவும் என கேட்டு கொண்டுள்ளது. தனிப்பட்ட பாதுகாப்புக்கான திட்டங்களை மறுஆய்வு செய்து கொள்ளும்படியும் அறிவுறுத்தி உள்ளது.


நிலைமை பற்றி உள்ளூர் ஊடக செய்திகளை உன்னிப்பாக கவனிக்கும்படியும், எல்லா நேரத்திலும் முறையான அடையாள அட்டையை வைத்திருக்கும்படியும், உள்ளூர் போலீசாருக்கு தேவைப்படும்போது ஒத்துழைப்பை வழங்கும்படியும் வலியுறுத்தி உள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News