
மூவாண்டில் அடிவைக்கும் முத்தமிழின் மின்னிதழே!
பாராண்ட மன்னன் எனப் பரிமளிக்கும் பொன்னிதழே!
நூறாண்டு நூல் நயத்தை நுவலுகின்ற நுண்ணிதழே!
யாராண்ட போதும் நான் உன் பிரஜை தான்இதழே!
தகவல் என்றால் செய்தி, செய்தியினால் அறிவு.
அகவல்என அறிவைத் தினம் முழங்கும் நீ பேரருவி!
அகத்தியனின் தமிழமுதில் இ - இதழாம் தேனருவி!
குகனுக்கு ராமன் போல் வாசகர்க்கு நீயன்றோ?
சிரிப்புக்கு ஜோக்கென்றால் சிந்தனைக்கு மீம்ஸ்.
கொரிப்புக்கு சமையல் டிப்ஸ், கொண்டாட ஆன்மீகம்.
எரிப்புக்கு க்ரைம் கார்னர், ஏந்தல்களின் வரலாறு,
வெறுப்புற்ற தலைவர்களின் பொறுப்பற்ற வாய்வீச்சு!
உவப்பான சிறுகதைகள், சிறப்பான தொடரோடு,
தவப்பயனாய் அனுபவிக்க சுற்றுலாத் தலவிபரம்,
குவிப்பாக இலவசமாய்க் கொண்டு தரும் நவரசமே!
சுவைப்பாகின் பொற்குடமே! வாசகரின் பரவசமே!
அல்லிவட்டம் எனத் திகழும் அழகான புதுக்கவிதை,
புல்லிவட்டம் எனத் திகழும் பூஉலகச் செய்திக்குவை,
பல்சுவைப் பகுதியிலோ பரவசமாய் ஆலவட்டம் என
நல்லமணம் வீசுகின்ற நூல் மலரே! இ இதழே!
முகமறியா சான்றோரை ஒருகுடையின் கீழிணைத்தாய்!
சுகமான குடும்பத்து சொந்தமானோம் வாசகர்கள்!
புகல்வதுவும் சாத்தியமோ உனக்கிணைதான் எதுவுண்டு?
யுகம்யுகமாய்த் தொடரட்டும் இணையில்லாத் திருத்தொண்டு!!
பாளை. கணபதி
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?