முப்பெரும் விழாவில் தலைமை ஆசிரியருக்கு அண்ணா தலைமைத்துவ விருது
Jul 07 2025
26

வந்தவாசி, ஜூலை 08:
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் 2024 - 25 ஆம் ஆண்டுக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது, பேராசிரியர் அன்பழகன் விருது, கற்றல் அடைவுக்கான
100 நாள் சவாலில் பங்கேற்ற பள்ளிகளுக்கு விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்குதல் உள்ளடக்கிய முப்பெரும் விழாவாக திருச்சி தேசிய கல்லூரி வளாகத்தில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று விருதுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் டி.ஆர். நம்பெருமாளுக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் கல்வி அமைச்சரால் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?