முன்னாள் மாணவர் சந்திப்பு !

முன்னாள் மாணவர் சந்திப்பு !


'முன்னாள் மாணவர் சந்திப்பு...

என்று கல்லூரி மாணவர் குழுவின் அழைப்பு விடுத்த செய்தியை கண்டதும் மனது குதூகலித்தது....


கல்லூரி படிப்பு முடிந்து இருபத்தைந்து ஆண்டு காலம் கழிந்து விட்ட நிலையில்...


பாடம், தேர்வு, தேர்ச்சி, எதிர்காலம் பற்றிய சிந்தனை எதுவும் இல்லாமல் வாழ்க்கை பாடம் கற்றுக் கொண்டிருக்கும் தருணத்தில் மீண்டும் கல்லூரி வாசலை மிதிக்கப் போகிற ஒரு எதிர்ப்பார்ப்பு

மட்டுமல்ல...


காதலா, நட்பா என்று பிரித்துப் பார்க்க முடியாத தருணங்களில்...

என்னுடன் பழகிய ரேகா, பாரதி, காவியா....

இப்படி இவர்களின் நிகழ் காலம் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பும் என்னுள் எகிரியிருந்தது...


இதில் பாரதி மட்டுமே என் மனதில் காதலியாய் குடி கொண்டிருந்தவள்...


ரேகாவும், காவியாவும் திருமணம் ஆகி...

குடும்ப வாழ்க்கையில் பிணைந்து விட்டதை காற்றுவாக்கில் நான் அறிந்தேன்...


பாரதி மட்டுமே கேள்விக்குறியாய் இன்னும் என் மனதில்....


அன்று ஞாயிற்றுக்கிழமை புலரும் வரை என் மனதில் போராட்டம் இருந்தது...


கல்லூரியில் படித்து இன்னும் என்னுடன் நட்புடன் இருக்கும் வேலுவுடன்...

கல்லூரியை நோக்கி பயணித்தேன்....


என்னுள் ஒரு போராட்டம் பட்டிமன்றம் எல்லாம் நடந்து கொண்டிருக்க....


இருசக்கரத்தை ஓட்டிக் கொண்டிருந்த வேலுவின் தோள்பட்டையை பற்றினேன்....


'சற்று வாகனத்தை நிறுத்துமாறு அவனிடம் பணிந்தேன்.... !'


வாகனத்தை நிறுத்தியவன் ஏன் என்ற கேள்வியுடன் என்னை பார்த்தான்...


"வேலூர் நீ மட்டும், மாணவர் சந்திப்பு விழாவிற்குக்கு சென்று வா... !


என்றேன் ....


"என்னை விட நீ தானே அதிகம் ஆர்வம் கொண்டாய் ...பிறகு ஏன் நீ தடுமாறுகிறாய் !"

என்றான் நண்பன்.


"இல்லை ,என் மனம் சற்றே பின்னோக்கி சென்று விட்டது ...

நான் தீவிரமாய் காதலித்த பாரதி ஒருவேளை அவள் திருமணம் ஆகி குடும்பத்துடன் வந்து விட்டாள்...!"


"இன்னுமாடா அவளை மனதில் சுமந்து நடக்கிறாய் !'

என்றான் நண்பன்.


"இல்லை மனதில் சுமந்து நடக்கவில்லை இனியும் அவளை சுமக்க கூடாது என்று தவிர்க்கிறேன் ஒருவேளை அவளும் என்னைப் போலவே இன்னும் காதலை மனதில் சுமந்து இருந்தால் அதுவும் எனக்கு ஒரு சுமையாகிவிடும் , அவள் திருமணம் ஆகி விட்டிருந்தால் அதுவும் எனக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி விடும்..

அதனால் நீயே மாணவரச் சந்திப்புக்கு சென்று வா ஆனால் என்னைப் பற்றி அவளிடமோ... அவளைப் பற்றி என்னிடமோ எதையும் சொல்ல வேண்டாம்... !


பாதி வழியில் திரும்பி நடந்தேன் என் மனபாரத்தை இன்னும் சுமந்து சிங்கிளாய்....



எம்.பி.தினேஷ்.

கோவை - 25

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%