முன்னாள் மாணவர்கள் 1978-1980-ல் 47 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர்கள் சந்திப்பு கூட்டம்.....

முன்னாள் மாணவர்கள் 1978-1980-ல் 47 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர்கள் சந்திப்பு கூட்டம்.....

 திருவண்ணாமலை மாவட்டம் டிசம்பர் -29 கீழ்பென்னாத்தூரில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1978- 1980 ஆண்டுகளில், எஸ் எஸ் எல் சி,பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவ மாணவியர்களின் கூட்டம் கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வழக்கறிஞர் திரு.ஜாகிர் உசேன் அவர்கள் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற ஏடிஎஸ்பி திரு.சங்கர் அவர்கள்முன்னிலை வகித்தார். திரு.ரவிச்சந்திரன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் .திரு.சேகர் நன்றியுரை கூறினார். இந்தக் கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு தாங்கள் படித்த பள்ளியில் நடைபெற்ற பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள். மேலும் தாங்கள் படித்த அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பரிசுகள் அளித்தார்கள். அவர்கள் படித்த பொழுது இருந்த முன்னாள் ஆசிரியர்களையும் அழைத்து நினைவுப் பரிசு அளித்து மகிழ்ந்தார்கள். ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு முன்னாள் மாணவர்களாகிய ஆகிய தாங்கள் இவ்வாறு கூட்டம் நடத்தி, முன்னாள் மாணவர்களையும் முன்னாள் ஆசிரியர்களையும் சந்தித்து மலரும் நினைவுகளை பேச வேண்டும் என்று முடிவு எடுத்தார்கள்.தாங்கள் படித்த பள்ளிக்கு மேலும் பல உதவிகள் செய்வதாகவும் உறுதி அளித்தனர். பத்துக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ,மாணவிகள் தாங்கள் படித்த, கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் புரவலர் திட்டத்திற்கு நன்கொடை அளித்து, பள்ளியின் மேம்பாட்டிற்கு அன்பளிப்பு அளித்தார்கள். இறுதியாக குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%