
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகர பகுதிகளில் உள்ள 34 அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் 3,850 மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் .
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் சந்திரகலா அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ஏற்கனவே ஊரக மற்றும் நகரப் பகுதிகளில் அரசு தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஊரகப்பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இரண்டாம் கட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டது .
இந்நிலையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் இன்று நகரப் பகுதிகளில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்கள்.
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை நகராட்சி வி ஆர் வி அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் கைத்தறி மற்றும் துணிவு துறை அமைச்சர் ஆர் காந்தி அவர்கள் முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கம் நிகழ்ச்சியில் தொடக்கப்பள்ளி மாணாக்களுக்கு காலை உணவை பரிமாறி மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை அறிந்தினார்கள்.
நகரப் பகுதிகளில் உள்ள அரசு நிதி உதவி பெரும் பள்ளிகளில் ராணிப்பேட்டை நகராட்சியில் உள்ள8 பள்ளிகள், அரக்கோணம் நகராட்சியில்5 பள்ளிகள் சோளிங்கர் நகராட்சியில் 5 பள்ளிகள் ஆற்காடு நகராட்சியில் உள்ள 6 பள்ளிகள் வாலாஜா நகராட்சியில் 2 பள்ளியில். மேல்விஷாரம் நகராட்சியில் 7 பள்ளிகளை விலா பாக்கம் பேரூராட்சியில் ஒரு பள்ளி என என அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் இத்திட்டம் இன்று முதல் விரிவாக்கம் செய்யப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது .
இதன் மூலம் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 3,850 மானாக்கர்கள் நாள்தோறும் காலை உணவை நாள்தோறும் சாப்பிட்டு பயன்பெற உள்ளனர். இத்திட்டத்தில் உணவுகள் நகரப் பகுதிகளில் உள்ள முதலமைச்சரின் காலை உணவு சமையல் கூடத்தில் தயாரிக்கப்பட்டு மாணாக்களுக்கு காலை 8 மணிக்கு பரிமாறப்படும்.
இந்நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத் , துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரேமலதா, நகராட்சி பொறியாளர் பரமராசு , நகர மன்ற உறுப்பினர்கள் , பள்ளி ஆசிரியர்கள் பலர் உள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?