மாயம்

மாயம்


உலகே மாயம்

உள்ளம் மாயம்

கலைகள் மாயம்

கருத்து மாயம்!


கவிதை மாயம்

கண்கள் மாயம்

உவகை மாயம்

ஊரே மாயம்!


நீயும் மாயம்

நானும் மாயம்

தாயும் மாயம்

சேயும் மாயம்!


தந்தை மாயம்

தனயன் மாயம்

விந்தை மாயம்

விருப்பு மாயம்!


கதிரோன் மாயம்

கடவுள் மாயம்

இதயம் மாயம்

இன்பம் மாயம்!


காற்று மாயம்

கனவு மாயம்

நேற்று மாயம்

நினைவு மாயம்!


மண்ணும் மாயம்

மதியும் மாயம்

விண்ணும் மாயம்

வீரம் மாயம்!


கனலும் மாயம்

காசும் மாயம்

உணவும் மாயம்

ஒளியும் மாயம்!


பாரும் மாயம்

பண்பும் மாயம்

ஏரும் மாயம்

ஏற்றம் மாயம்!


எல்லாம் மாயம்

எதுவும் மாயம்

நல்லாப் பாரு

நாடே மாயம்!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*

திருவண்ணாமலை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%