மாணவர்கள் சமூக பொறுப்புடன் செயல்பட வேண்டும்: விழுப்புரம் டி.ஐ.ஜி உமா அறிவுரை

விழுப்புரம், ஆக.12-
செல்போனை தவறாக பயன்படுத்தக்கூடாது என்றும், மாணவர்கள் சமூக பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் போலீஸ் டி.ஐ.ஜி. உமா அறிவுரை வழங்கியுள்ளார்.
விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. உமா தலைமையில் மாணவ- மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
அப்போது டி.ஐ.ஜி. உமா பேசியதாவது:-
போதை பழக்க வழக்கங்களுக்கு மாணவர்கள் அடிமையாகக்கூடாது. இதற்கான தொடர்பு நம்மிடம் இருக்கும் செல்போனில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. ஆகவே செல்போனை தவறாக பயன்படுத்தக்கூடாது. இன்ஸ்டாகிராம், ட்விட்டர், ஷார்ட்ஸ் இதுபோன்ற செயல்களில் மாணவர்கள் இணைந்துதான் தவறான பாதைக்கு செல்கிறார்கள். அதன் மூலம் அவர்களுக்கு தவறான தொடர்பு கிடைக்கிறது. எனவே இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
மாணவர்கள், தங்களை சுற்றியுள்ள சுற்றுப்புறங்களில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து வைத்துக் கொள்வதில் சமூக பொறுப்பு வேண்டும். அதே நேரத்தில் சிறு, சிறு சட்டங்களை பற்றி தெரிந்து வைத்துக்கொள்ளுதல் மிகவும் அவசியம். குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எதிரான குற்றங்களை பற்றி தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டால் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்.
மேலும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், இருசக்கர வாகனங்கள் ஓட்டக்கூடாது. 18 வயதுக்கு பிறகு முறையான ஓட்டுனர் உரிமம் பெற்ற பின்னரே வாகனத்தை இயக்க வேண்டும். அப்படி 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள், வாகனங்கள் இயக்கினால் அவர்களது பெற்றோருக்கு தண்டனை உண்டு. போதைப்பொருள் விற்பனை செய்யும் மாணவர்கள் பிடிபட்டால் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் தவறை நான் செய்யவில்லை, வேறு நபர்கள் செய்ய தூண்டினார்கள் என்று கூறினாலும் போதைப்பொருள் விற்ற நபருக்கு தண்டனை உண்டு. ஒவ்வொரு தனிநபரும், தன் பெற்றோரின் நிலையையும், சமூகத்தின் நிலையையும் அறிந்து பொறுப்புடன் நடந்துகொண்டால் சமுதாயத்தில் கேடு ஏற்படாது.
இவ்வாறு அவர் பேசினார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?