மாங்காய் பச்சடி

மாங்காய் பச்சடி

அறுசுவை கொண்ட மாங்காய் பச்சடி தேவையான பொருட்கள் :ஒட்டு மாங்காய் ஒன்று, வெல்லம் 200 கிராம், பச்சை மிளகாய் 2 ,உப்பு ஒரு சிட்டிகை, ஒரு ஸ்பூன் வெப்பம் பூ, தாளிப்பதற்கு ஒரு ஸ்பூன் கடுகு, எண்ணெய் சிறிதளவு, இரண்டு ஸ்பூன் அரிசி மாவு. செய்முறை: மாங்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும் பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி மாங்காயை அதில் போட்டு நன்றாக வேக வைக்கவும் அதனுடன் பச்சை மிளகாய் சேர்க்கவும். மாங்காய் வெந்த பிறகு நறுக்கி வைக்கப்பட்ட வெல்ல த்தை சேர்க்கவும். வெல்லம் நன்றாக கரைந்த பிறகு ஒரு சிட்டிகை உப்பை சேர்க்கவும். நன்றாக கொதித்த பிறகு அதில் வேப்பம்பூவை போடவும் நன்கு கலக்கவும் பிறகு அரிசி மாவை தண்ணீரில் கலந்து அதில் ஊற்றவும் .2 நிமிடம் கழித்து கீழே இறக்கி வைக்கவும் பிறகு கடுகு தாளிக்கவும் .மாங்காய் பச்சடி ரெடி சூடாக பரிமாறவும் நாக்கில் எச்சை ஊறுகிறது குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.   



எம்.எல் .பிரபா

ஆதம்பாக்கம்

சென்னை 88

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%