அத்தை !இங்கே பாருங்கோ எங்களால் இருபது பவுன் தான் போட முடியும் அதுக்கு மேலே முடியாது .கல்யாணம் பண்ணறதே பெரிசாக இருக்கும் இந்த காலத்தில் இப்படி பவுன் எல்லாம் கேட்கிறது ரொம்பவே ஓவர் அத்தை ..
என்றாள் மிருதுளா..
அது இல்லையடிம்மா, நீ ஆத்துக்கு வரும் போது கழுத்து நிறைய போட்டுண்டு வந்தா தானே மத்த மாட்டுப்பெண் எதிரே என் தம்பி பெண் என்று பெருமையாக சொல்ல முடியும் என்று தன் வரப்போகும் மருமகளை கொஞ்சி கொண்டே அத்தை சொல்ல ...
அக்காவும் தன் பெண்ணும் பேசி கொள்ளுவதை வேடிக்கை பார்த்து கொண்டே செக் புக்கை எடுத்து பையில் வைத்தார் கிருஷ்ணமூர்த்தி ..
அடுப்பாங்கறையிலிருந்து வெறுப்பாக இதை பார்த்து கொண்டே அப்பளத்தை வெட்டு வெடுன பொறித்தாள்
எடுத்தாள் கற்பகம் மிருதுளாவின் அம்மா ..
கற்பகம் வாயில் முனுமுனுத்தாள் ,
கல்யாணம் நடக்குமா?
இல்லை நிற்குமா?
இந்த காட்சிகள் அனைத்தையும் அந்த இடத்தில் இருந்த அந்த கிருஷ்ணன் சிலை இவர்களின் சம்பாஷணை கேட்டு சிரித்து கொண்டு இருந்தது ...
கிருஷ்ணமூர்த்திக்கு எல்லாமே தன் அக்காதான்..அவர் அம்மா இவரை 3 வயது குழந்தையாக விட்டுட்டு போய் சேர்ந்தது முதல் 9 வயதில் இருந்த அக்கா இவனை அப்பவே தன் மகன் போல சுவீகரித்துக்கொண்டவள்..
தன் 16 வயதில் திருமணத்துக்கு அவர் அப்பா ஏற்பாடு பண்ண..கொஞ்சமும் கவலைப்படாமல்..தன் தம்பியையும் சேர்த்து அழைத்துக்கொண்டால் மட்டுமே என் கழுத்தில் தாலி கட்ட முடியும் உங்க பிள்ளைனு..அவள் மாமியாரிடம் முகம் பார்த்து சொன்னாள்..
இவள் தைரியம் பிடித்து போய் அப்படியே மருமகளோடு அவள் தம்மியையும் அழைத்து வந்து விட்டார் அவர்..அத்தனாம் பெரிய கூட்டுக்குடும்பத்தை பார்த்துக்கொண்டு தனக்கு எது கிடைக்கலன்னாலும் கம்முனு இருப்பவள்..தன் தம்பிக்கு ஒரு பென்சில் வாங்கி தரலன்னா கூட வீட்டை இரண்டு பண்ணிடுவாள்..
அதனாலேயே.தம்பியை படிக்க வைத்து ஆளாக்கி அவனுக்கொரு பெண்ணையும் பார்த்து கட்டிவைத்து பிறகுதான் ஓய்ந்தார் அவள் மாமியார்..
எல்லோரும் கிருஷ்ணானு கூப்பிட்டா..இவள் மட்டுமே மூர்த்தி கண்ணா',னுதான் கூப்பிடுவாள்..தன் மூனாவது பையனை தூக்கிக்கொண்டுபோய் ஒரு மாதம் தங்கி தன் தம்பி மனைவிக்கு பிரசவத்தில் ஒத்தாசையாய் இருந்து ..கையில் பெண் குழந்தையை வாங்கியவள் ..நேராக த் தம்பியிடம் காண்பித்தார் ..
இந்தாடா..என் வீட்டின் மூன்றாவது மருமகள்.அவளை முறைப்படி ஏன் வீட்டுக்கு கூப்பிட்டுக்குற வரை..பத்திரமா வளர்த்துடு என்ன?,என்று அச்சாரம் போட்டவள்..
அவள் கண்டாளா..தன் மற்ற இரண்டு பிள்ளைகளும் டாக்டரும் என்ஜியரும் ஆவார்கள்,என்று..வலிய ஆளுக்கு உடல் நிறைய நகைகளை பூட்டி வந்தனர் மருமகள்கள்..இவர் கேட்காமலே..
அதான் இப்ப தன் தம்பியிடம் கெஞ்சிட்டு ..தன் மருமகளா வரப்போற மிருதுளாவையும் தாஜா பன்றா..
"அக்கா..அவ அம்மா நகையையும் நான் கொடுக்க சொல்றேன்.ஒரு பொண்ணு , உன் ஆத்துல உன் லாயர் பையனை கட்டிக்கிட்டு ஜாம் ஜாம்னு இருக்க போறா..கண் நிறைஞ்சி அவ வாழறதை பார்க்கறத விட சந்தோஷம் வேற இருக்கோ..?"
திரும்பி தன் தம்பியை பார்த்தார் அம்புஜம்..இப்படி ஆக்ஸிடென்ட்ல ஒரு கையும் காலும் போகலன்னா..இன்னும் விசேஷமாய் அதிக பவுன் போட்டே கட்டிக்கொடுத்திருப்பான் தன் தம்பினு தெரியாதா என்ன..?
பாழாப்போன விதி..இதோ..கல்யாண நாள் குறிச்சி..தாலி கட்டும் நேரமும் நெருங்கிட்டு..
பகவான நெனச்சி கண்ணத்துல போட்டுக்கறா..அம்புஜமும் மிருதுளாவ பெத்தவளும் ஒரு சேர..சின்ன நிம்மதி பெருமூச்சோடு..
மிருதுளாவின் கைப்பிடித்திருந்த வெங்கிட்டு மெல்ல அவள் காதில் .." உண்மையாவே உன் பெயர் போல ..உன் பிஞ்சு கையும் மிருதுவாதான் இருக்கு", குபீர்னு சிரித்தாள் அவள்..பக்கத்திலிருந்தவர்கள் வாய் பொத்தி சிரிக்க..
சொந்தத்துல பொண்ணு குடுக்க, இதுக்குதான் சொல்லியிருக்காங்க பெரியவங்க..
"இந்த சந்தோஷம் எப்பவும் உன் முகத்துல இருக்கட்டும்",அவளை வாழ்த்த..மலர்ந்தனர் இருவரும்..
தன் நகைகளையும் தன் மகளுக்கு கொடுத்துவிட்டு..தாலிக்கொடியோடு மடிசாரில் தன் கழுத்தை மறைத்து நின்ற தன் தம்பி மனைவியிடம்..தன் இரட்டை வட சங்கிலியை கொடுத்து போட்டுக்க சொன்னாள் அம்புஜம்.
சும்மா இல்லை ..16 பவுன் அது..
வார்த்தை வராமல் கற்பகம் நடுங்க..
" இப்ப என் சம்பந்தி நீ..இப்படிலாம் உணர்ச்சி வசப்படக்கூடாது ..கேட்டியோ?
நானா கேக்கறவறை இதை உன் கழுத்துலேருந்து கழட்டப்படாது..", வேண்டுமென்றே சத்தமாக சொல்ல..மற்ற மருமகள்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்..
இப்போ அவரவர் தன் பங்குக்கு ..மிருதுளா கழுத்திலும் கையிலும் தங்கள் நகைகளை கழட்டிப்போட..
வாயடைத்து போனாள் மிருதுளா..கண்ணீரில் தத்தளித்தாள்..
அப்படியே
ஓடி வந்து தன் அத்தையை கட்டிக்கொண்டாள்..
"அத்தை,நீ இதுவரை எந்த மருமகளை பற்றியும் ஒரு வார்த்தை குறை சொன்னதேயில்லை..இப்ப புரியறது..குறை சொல்ல தேவையே இல்லைனு..உன் பேரை நானும் காப்பாத்துவேன் அத்தை.நல்ல மருமகள்தான் மூனாவதா வந்தவளும்னு எல்லோரும் சொல்லும்படி நடந்துப்பேன்!",என்று தேம்பியபடி சொல்ல..
" அசடு..உன் கண்ணுல தண்ணி தளும்பினா என் தம்பி தவிச்சிடுவான்..எப்பவோ நீ எனக்கு மருமகளாகிட்டேடி..இனிதான் என் பையன் கூட வாழப்போற..! மத்த மருமகளுங்க மாதிரி..சீக்கிரமே என் கையில ஒன்ன பெத்துக்குடுக்க போற!", என்று சொல்ல..
சுற்றியிருந்தவர்கள் கொல்லென்று சிரிக்க..முகம் குங்குமமாக சிவக்க..தன் அப்பாவிடம் வந்து கோள் மூட்டினாள் .
" பாருங்கோப்பா..! இப்படிலாம் கிண்டல் பண்றா பாருங்க..நான் பிள்ளைய பெத்து உங்கிட்டதான் கொடுப்பேன்",
..
',சரிம்மா..உன் மனசு போல ஆகட்டும்.அதை வளர்க்கறதுக்காகவே இன்னுப் தெம்போட இருக்கேன் நான்", என்று வீல் சேரில் இருந்தவாறு அவரும் சொல்ல ..
அங்கு அத்தனை பேர் மனசும் மழைக்கால கிணறு போல தளும்பிக்கொண்டிருந்தது மகிழ்ச்சியில்..
நீங்களும் தம்பதியரை வாழ்த்துங்கோ..
கண்ணன் வழக்கம் போல சிலையாக சாட்சியாக நின்றிருந்தான் ..அலங்காரத்தோடு..நடுக்கூடத்தில்..
(முற்றும்)

தஞ்சை பியூட்டிஷியன்
உமாதேவி சேகர்