ஏமாற்றாதே, ஏமாறாதே !

ஏமாற்றாதே, ஏமாறாதே !



" இதோ பாருப்பா! நல்ல படிப்பு. கை நிறையச் சம்பாதிக்கற பெரிய வேலை உனக்கு. ஆள் நல்ல பர்ஸனாலிடியா

வும் இருக்கே.என்ன பிரயோஜனம் ? 29 வயதாகியும் கல்யாணம் நடந்தபாடில்ல. நான் சொல்றத கேளு. எட்டு வெள்ளி க்கிழமைகளில் நம்ம நகர்ல இருக்கற காளிகாம்பாள் கோயிலுக்குப் போய் நீ வேண்டிக்கோ. சக்தி வாய்ந்த அம்மன்! நிச்சயம் பலன் கிடைக்கும். " அம்மா சொல்ல அதை தந்தையும் ஆமோதி த்தார்.


ராஜேஷ் எல்லா அம்சமும் பொருந்தி

யிருந்தும் ஏனோ திருமண தசை தள் 

ளிப் போய்க் கொண்டிருந்தது ! பார்க்

காத பெண் இல்லை. ஜாதகமும் சரி

வர பொருந்தவில்லை. அதனால் கவ 

லைப்பட்ட பெற்றோர் அப்படி ஒரு ஐடி

யாரைச் சொன்னார்கள். 


ராஜேஷுக்கு ஆன்மிகத்தில் அவ்வள வாக நாட்டம் இல்லை. இருந்தாலும் பெற்றோரின் விருப்பத்திற்கு தடை

சொல்ல மனமில்லை. ஆகவே அன்று முதல் வெள்ளிக்கிழமை. அன்றே இரண்டு கிலோமீட்டர் தள்ளி உள்ள காளிகாம்பாள் கோயிலுக்கு தன் டூ வீலரில் புறப்பட்டுச் சென்றான் ராஜேஷ். கூடவே அவன் மனதில் ஒரு

திட்டம் உருவானது.


வண்டியை பார்க் செய்துவிட்டு 10 ரூபாய் கொடுத்து டோக்கன் வாங்கி யவன் நடையைப் கட்டினான். 


வெள்ளிக்கிழமையாததால் கோயிலில் 

கூட்டம் நிறைய காணப்பட்டது. பெண் கள் எண்ணிக்கைதான் மிகுதியாக இருந்தது. 


இரண்டு பக்கமும் வரிசையாக பூஜைப் பொரு ட்கள் விற்கும் கடைகள். வியாபா ரம் அமோகமாக நடந்து கொண்டிருந் தது. 


ஒரு சிறுவன் உட்கார்ந்திருக்கும் கடையை நோக்கிச் சென்றான் ராஜேஷ். பூஜைப் பொருள்களாக தட்டு ஒவ்வொன்றிலும் ஒரு தேங்காய்; இரண்டு வாழைப் பழங்கள்; ஒரு முழம் பூ, வெற்றிலை பாக்கு, மஞ்சள் காணப் பட்டன. 


 ஒரு தட்டு 100 ரூபாய் என்று சிறுவன் சொன்னதும் இருநூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்து விட்டு பாக்கி சில்லரை 100 ரூபாயை வந்து வாங்கிக் கொள்வதாகச் சொல்லி விட்டு தட்டுடன் அகன்றான் ராஜேஷ்.


தர்ம தரிசனம் வரிசை நீண்டு இருந்தது.

அந்த வரிசையில் நின்றால் நிச்சயம்

ஒரு மணி நேர அவகாசத்திற்கு மேலா 

கிவிடும். அதனால் 50 ரூபாய் கொடு 

த்து ஸ்பெஷல் தரிசனக் கியூவில் போய் 

நின்று கொண்டான். 


அரை மணியில் தரிசனம் முடிந்து வெளியே வந்தவன், கடையிலிருந்த சிறுவனிடமிருந்து பிளாஸ்டிக் 

பையை வாங்கி அதில் பிரசாதங்க ளைக் கொட்டி விட்டு தட்டை சிறுவ னிடம் திருப்பித் தந்தான். பிறகு சிறுவன் தந்த மீதி 100 ரூபாயை வாங்கிக் கொண்டு அகன்றான். மனம் சந்தோஷத்தீல் ரீங்காரம் இட்டது ! 


வீட்டுக்கு வந்ததும் பையை அம்மாவி

டம் தந்து விட்டு தன் அறைக்குள் நுழை ந்த ராஜேஷ் தன் பாக்கெட்டிலிருந்து சிறவன் தந்த100 ரூபா நோட்டை எடுத்து உற்று பார்க்கும் போது தேள் கொ ட்டியது போல் இருந்தது. சிறுவன் கொடுத்தது கள்ள 100 ரூபாய் நோட்டு! தன்னிடம் முதல் முறையாக எப்படியோ வந்து மாட்டிக் கொண்ட கள்ள நோ ட்டான 200 ரூபாயை சமயம் பார்த்து தள்ளி விட்டதற்கு கிடைத்த சன்மானம் என தேற்றிக் கொண்டான் ராஜேஷ். 



வி.கே.லக்ஷ்மிநாராயணன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%