மறைய வேண்டும்

மறைய வேண்டும்


ஏகபோக அரசன் வாழும் ஊரிலும், ஏழையும் வாழத்தான் செய்கிறான்.


இறப்பு சலுகை தந்து, இறப்பை தள்ளி வைக்க, எமனுக்கும் நேரமில்லை.


பந்தள ராஜாவாக இருந்தாலும், பாடையில் போய்த்தான் ஆக வேண்டும்.


சந்தனம் பூசி வாழ்ந்தால் என்ன,

 சாவு நிச்சயம்,கை சேரும் சத்தியம்.


ஒப்பாரி வைத்து, உன் வறுமையை எவரிடமும் ஒப்பிக்காதே,

உப்புக்கு கூட பிரயோசனமில்லை.


சகலத்தையும் ஏற்று வாழ, சம்மதம் சொல்லி வாழ்க்கையோடு நில், வெற்றி கொள்.


கற்பனைக்கு எட்ட முடியாத வாழ்க்கையை, கண்ணீர் துளியில் கரைக்காதே.


கொடுத்தாலும் எடுத்தாலும், சொந்தங்கள் கூட வருவதில்லை.


இறக்கத்தான் பிறந்தோம் என்ற சிந்தனையை, எப்போதும் ஏற்றுக்கொள்.


வீண் வாதம் விவாதம் இல்லாத வாழ்க்கையை விரும்பி வரவேற்பு செய்.


மனிதனென்று மண்ணில் பிறந்தோம் மனிதனாகவே வாழ்ந்து மறைய வேண்டும்...



 சிவகங்கை வீ.கருப்பையா பாவை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%