சாலையோரமாக

சாலையோரமாக

நின்று கொண்டிருக்கிறேன் சாலையோரமாக!


கடைக்குள் சென்று விட்டிருக்கிறாள் மனைவி.


எதிரே ஜெராக்ஸ் கடை. 

அருகே தட்டச்சு அலுவகம்.

அதற்கும் அருகிலிருந்தது என்னவெனத்தெரியவில்லை.

அடுக்ககக்கடைகள்!


மூன்றிற்கும் சற்றுத்தள்ளி ஓடிக்காட்டிய திறந்த வெளி சாக்கடை


அதன் மேல் படர்ந்தூர்ந்த சாலையில் அலைந்தலுத்த வாகனங்களும் மனிதர்களுமாய்!


நீண்ட நாட்களாய் நினைவில் தங்கி வாங்க மறந்து போன பொருள்.


நடைபயிற்சி சென்று திரும்புகையில் வாங்கலாம் என நினைத்திருந்தது 

கை கூடி வந்ததாய் இன்று!


நீண்ட நேரம் நிற்பதாய்ப்படுகிறது.

அருகிலிருக்கிற தேநீரகம் சென்று திரும்பியிருக்கலாம்.


முன்னே அடர் சாம்பல் நிறத்திலொரு கார்.

பின்னே குட்டியானையாய் உருவகப்பட்டிருந்த வேன்.

இரண்டிற்கும் இடையிலான மின்கம்பத்தினருகே நான்.


நொடிகளின் பிடிபடாதிருத்தலில் நெளிகிறது மனம்.


கைபேசியை எடுத்துப்பார்த்துக் கொள்கிறேன்.


விடு பட்டுப்போனதை பேச்சாய் உயிர்பிக்கலாம் மகனிடம் என நினைத்திருந்த வேளையாய் வந்து விட்டிருக்கிறாள் மனைவி.


தூரத்து வானில் வரைவிட்டிருந்த நிலா

முகம் காட்டிச்செல்கிறது.


கண் சிமிட்டிய நட்சத்திரங்கள் கைக்கருகே வந்து செல்கிறது.


மின் கம்பத்தின் உச்சியில் ஒளிர்கிறது விளக்கு.


முகம் மோதிக்கூசச்செய்கிறது வாகனத்தின் விளக்குகள்.


எட்டெடுத்து வைக்கிறோம் இருவரும்!

எதிர்படுகிறது காலத்தின் நகர்வு.


விமலன்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%