மருத்துவ கல்லூரியில் ‘சீட்’ வாங்கி தருவதாக ரூ.11 லட்சம் மோசடி: ஆசாமி கைது

மருத்துவ கல்லூரியில் ‘சீட்’ வாங்கி தருவதாக ரூ.11 லட்சம் மோசடி: ஆசாமி கைது


சென்னை, ஜன. –


தனியார் மருத்துவ கல்லூரியில் உயர்கல்வி படிப்பிற்கான சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.11.65 லட்சம் பெற்று, மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.


சென்னை, பாலவாக்கம், கரீம் நகர் பகுதியில் வசித்து வரும் உமா (50), என்பவர் தனது மகள் சென்னை இஎன்டி ரிசர்ஜ் பவுண்டேஷன் கல்லூரியில் பிஏஎஸ்எல்பி படித்துவிட்டு, போரூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் எம்.எஸ்சி ஸ்பீச் பேத்தாலஜி என்ற மேற்பபடிப்பிற்காக விண்ணப்பித்திருந்த போது, அவரது குடும்ப நண்பர் மூலம் அறிமுகமான பீட்டர் அறிவரசன் என்பவர் உமாவிடம், தங்களது மகளுக்கு இதே படிப்புக்கான கல்லூரி சீட் வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.10 லட்சம் ஆகும் எனக் கூறியதன்பேரில், உமா 2 தவணைகளாக ரூ.10 லட்சம் பணத்தை பீட்டர் அறிவரசனிடம் கொடுத்துள்ளார்.


மேலும் கல்லூரி கட்டணம் கட்ட வேண்டும் எனவும் 1.65 லட்சம் பணம் கேட்டதன்பேரில், உமா அவரது வங்கி கணக்கிற்கு ரூ.1.65 லட்சம் அனுப்பியதாகவும், ஆனால் பீட்டர் அறிவரசன் சொன்னபடி கல்லூரி சீட் வாங்கி தராமல் ஏமாற்றியதால், அவரிடம் மொத்தம் கொடுத்த ரூ.11.65 லட்சம் பணத்தை திரும்ப கேட்டபோது தகாத வார்த்தைகள் பேசி பணம் தராமல் ஏமாற்றியதாகவும் நீலாங்கரை காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார்.


அதன் பேரில் போலீசார், மோசடி பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பண மோசடியில் ஈடுபட்ட பீட்டர் அறிவரசனை (42) கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பீட்டர் அறிவரசன் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%