பொங்கல்: சிறப்புப் பேருந்துகளில் 2.47 லட்சம் பேர் பயணம்!

பொங்கல்: சிறப்புப் பேருந்துகளில் 2.47 லட்சம் பேர் பயணம்!


 

பொங்கல் திருநாளை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளில் இதுவரை 2.47 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.


வழக்கமாக இயக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளுடன், பொங்கல் திருநாளையொட்டி சிறப்புப் பேருந்துகளும் கடந்த ஜன. 9 -ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது.


இதன்படி, ஜன. 10 ஆம் தேதி நள்ளிரவு 24 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டதுடன், கூடுதலாக 712 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன.


இவ்வாறு மொத்தம் 2,804 பேருந்துகள் இயக்கப்பட்டு, 1,26,180 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.


ஆக, ஜன. 9 முதல் 10 நள்ளிரவு 24 மணி வரை, மொத்தம் 5,510 பேருந்துகள் இயக்கப்பட்டு, 2,47,180 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். அத்துடன், இதுவரை சென்னையிலிருந்து 2,18,900 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், பொங்கல் திருநாள் பயண காலத்தில், பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும் என்றும் எனவே, கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, பொதுமக்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளுமாறும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%