மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் திருக்கோயில் சொர்க்கவாசல் திறப்பு

மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் திருக்கோயில் சொர்க்கவாசல் திறப்பு



மயிலாடுதுறை , டிச , 31 - திருஇந்தளூரில் பிரசித்தி பெற்ற பரிமள ரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது, பெருமாள் பள்ளி கொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரெங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க ஆலயங்களுள் இது, ஐந்தாவது ஆலயமாகும். திருமங்கையாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடல்பெற்ற 1,500ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம், சந்திரனின் சாபம் தீர்த்ததும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22-வதுமான இந்த ஆலயத்தில் ஏகாதசியை முன்னிட்டு, அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு பெருமாள் மங்களகிரி படிச்சட்டத்தில் புஷ்ப அலங்காரத்தில் உள் பிரகாரத்தில் ஊர்வலமாக எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து சிறப்பு ஆராதனைகளுக்குப்பின், பெருமாள் பாசுரங்களை பட்டாச்சாரியார்கள் பாடினர். தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது .அதனை அடுத்து பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் காலை 5.18 மணிக்கு திறக்கப்பட்டு, பெருமாள் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார். திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தார்கள். 

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை தக்கார் உதவி ஆணையர் இரவிச்சந்திரன் , செயல் அலுவலர் ரம்யா , உபயதாரர்கள் , விழாக்குழுவினர் செய்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%