" சேவை செய் என்று யார் அறிவுரை சொன்னாலும் உதவின்னு பணம் கேட்டு வந்தாலும் , டோனேஷன்னு யார் வந்தாலும் விரட்டி விடாத குறையா பேசி வெறுங்கையோடு அனுப்புவார் ராஜன் .
இவர்கள் உழைக்காமல் ஊர் சுற்றும் வெட்டிக் கூட்டம் என்று மனதில் நினைப்பவர் ராஜன். நண்பர்கள் மத்தியிலும் இதையே சொல்லுவார் . மன அழுத்தம் மிகுந்தவராகவும் காணப்பட்டார்.
" அந்த பகுதியில் ஒரு முறை கணத்த மழையால் வெள்ளம் கரை புரண்டு ஓடியது . ராஜன் வீட்டு முதல் மாடி வரை வெள்ளம் புகுந்து வந்து விட்டது.
வயதான தாய் ராஜன் மனைவி வீணா குழந்தை ஷர்மிளி அனைவரும் பசி என்று கதறி அழுதார்கள் . அடிப்படை தேவைகளை கூட செய்து கொள்ள முடியாமல் தவித்தார்கள் .
வேதனையும் சோதனையும் ராஜன் குடும்பத்தை நான்கு நாட்களாக சூழ்ந்து கொண்டது .
செய்வதறியாது தவித்து மனதால் அழுது துடித்தார் ராஜன். காலத்தின் கொடுமையை இயற்கையின் சீற்றத்தை எண்ணி புலம்பி தவித்தார் ராஜன்.
" மீட்புக் குழுவும் சேவை குழுவினர்களும் இணைந்து ராஜன் குடும்பத்தினரை மீட்டு பத்திரமாக திருமண மண்டபத்தில் சேர்த்து தங்குவதற்கு இடம் கொடுத்து உணவு உடை மருந்து மற்றும் அடிப்படை வசதி செய்து கொடுத்தனர் .
அதில் ராஜனிடம் அடிக்கடி திட்டு வாங்கும் சேவை குழு தலைவர் திலகரும் ஒருவர் .
வெள்ள நீர் ஒரு வாரம் ஆனதும் முழுமையாக வடிந்தது . இயல்பு நிலைக்கு அந்த பகுதி திரும்பியது. ராஜன் குடும்பம் போன்று பல குடும்பங்களை சேவைக் குழுவினர்
வீட்டிற்கு திரும்பி அனுப்பி வைத்தனர் .
இப்போது புறக்கண் மட்டும் அல்ல அக்கண்ணும் நன்றாக திறந்து தெளிவு பிறந்தது ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தது ராஜனுக்கு .
சேவையின் தேவையை நன்கு புரிந்து கொண்டு தானும் அந்த குழுவில் ஒரு உறுப்பினராகி தேனீ போல சுறுசுறுப்பாய் அனுபவம் தந்த பாடத்தின் எதிரொலியால் சேவையை தன் தலையாய பணியாய் செய்ய தொடங்கினார் .
ஆணவம் இல்லா எளிமை உருவமாய் மாறி துடிப்போடும் சுனக்கம் இல்லாமல் தன் கைப் பணத்தையும் அதிகம் போட்டு உழைத்துக் கொண்டிருந்தார் ராஜன் . மன நிறைவு அதிகம் கொண்டவராய் மன அழுத்தம் இல்லாத புனிதராய் இப்போது ராஜன் .
- சீர்காழி. ஆர். சீதாராமன் .
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?