news Breaking News
clock

மதுரையில் மாநில வாலிபால் போட்டி: வெற்றி பெற்ற அணிக்கு "ஸ்டார் குரு" அறக்கட்டளை நிறுவனர் குருசாமி பரிசு

மதுரையில் மாநில வாலிபால் போட்டி: வெற்றி பெற்ற அணிக்கு "ஸ்டார் குரு" அறக்கட்டளை நிறுவனர் குருசாமி பரிசு



மதுரையில் "ஸ்டார்குரு" சேரிட்டபிள் பவுண்டேசன், ஸ்டார் குரூப் ஆப் கம்பெனிகள் சார்பில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாநில அளவிலான 19 வயதுக்கு‌ உட்பட்டோ ருக்கான வாலிபால் போட்டிகள் கரிமேடு ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றது.


‌இதில் மதுரை, திருநெல்வேலி, திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல், சேலம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றது. மகளிருக்கான இறுதிப் போட்டியில், சேலம் செயின்ட் மேரீஸ் அணி முதலிடத்தையும், ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் தஞ்சாவூர் எஸ்.டி.ஏ.டி அணியும் முதலிடத்தையும் பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றது.‌ வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.10,000மும், 2வது பரிசாக ரூ.8,000மும், 3வது பரிசு ரூ.6,000 மற்றும் சுழல் கோப்பைகளை "ஸ்டார்குரு" சாரிட்டபிள் பவுண்டேஷன் நிறுவனர் 'சமூகசேவகர்' குருசாமி வழங்கினார்.‌


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News