கல்யாணம் நிச்சயம் செய்து திருமண நாள் குறித்தாயிற்று. மண்டபம்/நாதஸ்வரம்/கேட்டரிங் முன்பணம் கொடுத்து பத்திரிக்கையும்
அடித்த பிறகு மணமகனின் தந்தை மார்பு வலிக்கிறது என சாய்ந்தார்
மருத்துவ மனைக்கு இரண்டு லட்சங்கள் செலவு செய்த பின் போய் சேர்ந்தார்.
அதனால் திருமண ஏற்பாட்டை தற்காலிகமாய் நிறுத்திக் கொள்ள இரு தரப்பிலும் சம்மதம். பெண்ணின் தாயாரோ அபசகுனம் பிடித்த இந்த மணமகள் வேண்டாம் என்று பிடிவாதம் பிடித்தார்.
மாப்பிள்ளை தாயிடம், ”இது நிச்சயிக்கப்பட்ட திருமணம் அல்ல.. நாங்கள் இருவரும்
ஒருவரை ஒருவர் இரு வருடங்களாக விரும்பி ஏற்பாடு செய்தது. எனவே இது மாதிரி மீண்டும் பேசாதீர்கள்” என்றான் நயத்துடன்.
மணமகள் வீட்டார் கடுங் கோபத்தில் இருந்தனர்.
“எங்க பக்கத்தில் கூட, என் அத்தையின் 37 வயது மகள் கண்ணில் கோளாறால் அறுவை சிகிச்சைக்குப் பின் இறந்து போனார்.” நாங்களும் சோகத்தில்தான் இருக்கிறோம் என்றார் பதிலுக்கு..
”சத்திரம்/மங்கல இசை/சமையல்காரருக்குக் கொடுத்த அட்வான்ஸ் திரும்பவில்லை. கையிலிருந்த பணம் எல்லாம் தண்ணீராய் கரைஞ்சு போச்சு..இனியும் சிறப்பாய் கல்யாணம் நடத்த முடியாது.. கோவிலில் காலை 6.30 – 8.00க்குள் மூன்று முடிச்சை எளிமையாக நடத்திடலாம். வரவேற்பு கிடையாது. ஆசீர்வாதம் செய்ததும், டோக்கன் கொடுத்து ஓட்டலில் டிபன் தந்து விடலாம்” என நிபந்தனை விதித்தனர் மணமகன் வீட்டார்..
படத் தயாரிப்பின் உதவியாளர் இடையே குறுக்கிட்டு, “யோவ் டைரக்டரே..இதெல்லாம் ஒரு கதைன்னு சொல்ல வந்துட்டே..ஹீரோ சம்பளம் 200 கோடி.. காமெடியனுக்கு 130 கோடி வில்லனுக்கு 40 கோடி..ஓடிடியில் கூட ரிலீஸ் பண்ணமுடியாத ஒன் லைனைத் தூக்கிட்டு வந்துட்டே..மேற்கொண்டு தயாரிபாளரைக் கடன்காரனாக்க திட்டமோ? மேல கை வெச்சு ரசாபாசாமாக்குறதுக்குள்ளே ஓடிப் போயிடு..இடைத் தரகரே இப்பேர்ப்பட்ட ஆளை எங்கேய்யா தேடிப் பிடிச்சே?”

-பி. பழனி,
சென்னை.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?