ஏழை அம்மா

ஏழை அம்மா


அழுவாதம்மா! கண்ணை தொடைச்சிக்க

அப்பா வர அஞ்சாறு நாளாகும்


புதுத்துணி எடுத்துகிணு பொம்மையும் வாங்கிக்கிணு


வேலைக்குப் போன

அப்பா வந்து கையில காசு தருவாரு


வளையலும் கொலுசும் வாங்கித் தாறேன் கண்மணி


கஞ்சியத்தான் குடிச்சுபுட்டு கலங்காம படுத்துக்க


கருக்கலுல எழுந்திருச்சு கருதறுக்க போகோணும்


கண்மூடி நீ தூங்கு கண்ணான எம்மவளே


காலம் மாறும் கவலையும் தீரும் கண்ணான கண்ணே


வி.பிரபாவதி

மடிப்பாக்கம்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%