மகாகவி பாரதி !..

மகாகவி பாரதி !..

 கவிஞர் இரா .இரவி !


எட்டயபுரத்தில் பிறந்து 

எட்டாத உயரம் எட்டியவன் 

பாரதி !


சிட்டுக்குருவிகளின் நேசன் 

சின்னச்சாமியின் செல்ல மகன் 

பாரதி !


முறுக்கு மீசைக்காரன் 

முத்தமிழுக்குச் சொந்தக்காரன் 

பாரதி !


செந்தமிழ் அன்னையின் புதல்வன் 

செல்லம்மாளின் அன்புக் கணவன் 

பாரதி !


பரங்கியர் பாரதம் விட்டு 

அகலக் காரணமானவன் 

பாரதி !


பாரதம் சிறக்க பா பல பாடி 

பா ரதம் செலுத்தியவன் 

பாரதி !


அச்சம் அறியாதவன் 

உச்சம் அடைந்தவன் 

பாரதி !


பன்மொழி அறிஞன் 

பண் இசைப் பாடல் யாத்தவன்

பாரதி ! 


மற்ற மொழிகள் அறிந்திருந்தும் 

மட்டற்ற தமிழை நேசித்தவன் 

பாரதி !


கவிதை நாயகி கண்ணம்மாவை 

கண் முன்னே கொண்டு வந்தவன் 

பாரதி !


பள்ளியாசிரியராக இருந்தவன் 

பள்ளியின் பாடநூலில் இடம் பெற்றவன்   

பாரதி !


இயற்கையை ரசித்தவன் 

இன்பக்கவி தந்தவன் 

பாரதி !


பாப்பா பாடல் பாடியவன் 

பாப்பாக்கள் உள்ளம் நிறைந்தவன் 

பாரதி !


காலத்தால் அழியாத கவிதைகள் 

கல்வெட்டாக பதித்தவன் 

பாரதி !


பெண்ணுரிமை பாடியவன் 

பேதமையைச் சாடியவன் 

பாரதி !


மூடநம்பிக்கைகளை வெறுத்தவன் 

பகுத்தறிவைப் பயன்படுத்தியவன் 

பாரதி !


உடலால் மறைந்திட்ட போதும் 

பாடலால் என்றும் வாழ்பவன் 

பாரதி !


.

மகாகவி பாரதி ! கவிஞர் இரா .இரவி  


எழுதியபடி வாழ்ந்தவன் 

வாழ்ந்தபடி எழுதியவன் 

மகாகவி பாரதி ! 


புதுமைக்கும் மரபுக்கும்

பாலம் அமைத்தவன் 

மகாகவி பாரதி ! 


விடுதலை விதையை 

விருட்சமாக வளர்த்தவன் 

மகாகவி பாரதி ! 


மற்றவரை மதித்தவன் 

சுயமரியாதை மிக்கவன் 

மகாகவி பாரதி ! 


வறுமையிலும் செம்மை 

ஏழ்மையிலும் நேர்மை 

மகாகவி பாரதி ! 


பா ரதம் செலுத்திய 

பாக்களின் சாரதி 

மகாகவி பாரதி ! 


பெண் விடுதலைக்கு 

போர்முரசு கொட்டியவன் 

மகாகவி பாரதி ! 


வாழ்வில் ஆசைப்பட்டவன் 

பேராசைப்படாதவன்

மகாகவி பாரதி ! 


மூடப் பழக்கங்களுக்கு 

மூடு விழா நடத்தியவன் 

மகாகவி பாரதி !  


பகுத்தறிவைப் பயன்படுத்தி 

பாடல்கள் புனைந்தவன் 

மகாகவி பாரதி ! 


அழியாத பாடல்கள் 

அகிலத்திற்கு வழங்கியவன் 

மகாகவி பாரதி ! 


வெள்ளையர்களை விரட்டிய 

காரணிகளில் ஒன்றானவன் 

மகாகவி பாரதி ! 


வாழ்ந்த காலம் முப்பத்தொன்பது 

பாடல்களின் காலம் பல நூற்றாண்டு  

மகாகவி பாரதி !   


மொழிகள் பல பயின்றவன் 

தமிழே சிறப்பு அறிவித்தவன் 

மகாகவி பாரதி ! 


.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%