மகளிர் உரிமைத் தொகைக்கு வீடு வீடாக விண்ணப்பம் விநியோகம்
Jul 11 2025
18

சென்னை:
கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறு வதற்கான விண்ணப்பங்கள் வீடு வீடாக விநியோகிக்கும் பணி மாவட்டங்களில் தொடங்கியது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் 1,382 தன்னார்வலர்கள் இப்பணி யில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் இத்திட்டத்தில் தற்போது ஒரு கோடியே 14 லட்சம் பெண்கள் பயனாளிகளாக உள்ளனர். புதிதாக விண்ணப்பிக்கும் தகுதியானவர்களுக்கு 3 மாதத்தில் தொகை வழங்கப்படும் என சட்டமன்றத்தில் துணை முதல மைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். மாவட்ட ஆட்சியர்கள் நேரில் பார்வையிட்டு விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடுகளை வழங்கி வருகின்றனர். ஜூலை 15 முதல் அக்டோபர் 15 வரை 176 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. விண்ணப்பங்கள் இந்த முகாம்களில் மட்டுமே வழங்கப்படும்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?