
"சேலம் ஒரு டிக்கெட் கொடுங்க "
என்று 500 ரூபாய் நோட்டை கொடுத்தவரிடம் மீதி 440 ரூபாயை
யும் டிக்கெட்டையும் கொடுத்து விட்டு 'சரியா இருக்கான்னு பணத்தை எண்ணி பாத்துக்கங்க அண்ணாச்சி .அப்புறம் என்னை குறை சொல்லாதீங்க "என்று கூறிவிட்டு புன்னகை தவழும் முகத்துடன் அடுத்த பயணியை நோக்கிச் சென்றார் கண்டக்டர் ரங்கநாதன்
அடுத்து முப்பது ரூபாய்க்கு டிக்கட்டுக்கும் 500 ரூபாய் நோட்டாகவே வரவே
அதையும் புன்னகையுடன் வாங்கிக்கொண்டு "அடுத்த முறை வரும்போது கொஞ்சம் சில்லறையா எடுத்துட்டு வந்துடுங்க " என்று பணிவுடன் கூறினார் ரங்கநாதன். ஒவ்வொரு நிறுத்தத்திலும் பயணிகள் இறங்குவதையும் ஏறுவதையும்
நன்றாக கவனித்துவிட்டு
பிறகுதான் விசில் கொடுத்தார்.
பயணி ஒருவர் கடலைக்காய் சாப்பிட்டு தோலை தான் உட்கார்ந்து இடத்திலேயே கீழே போடுவதைப் பார்த்த அவர்
தன் பாக்கெட்டில் இருந்த கவரை எடுத்துக் கொடுத்து இதுல போட்டு
அப்படியே ஓரமா வச்சுடுங்க .அப்புறமா நான் எடுத்து போட்டுட றேன் "என்று அன்பொழுகக் கூறினார் .
இதை எல்லாம் ஓரக்கண்ணால் கவனித்தபடியே பேருந்து ஓட்டுவதில் கவனமாக இருந்த
டிரைவர் கார்மேகம் 'எவ்வளவு கண்டக்டர்களுடன் பணிபுரிந்து இருக்கிறேன்.ஆனால் யாரும்
ரங்கநாதனைப் போல் பயணிகளிடம் இவ்வளவு அன்பாக நடந்து கொண்டதில்லை. உண்மையிலேயே இவரெல்லாம் வேற லெவல் . அவர் வீட்டில் இருக்கும் போது ஒருநாள் சப்ரைசாகச் சென்று அவரைப் பாராட்டி மகிழ வேண்டும் ' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார் .
ரங்கநாதன் வீடு. கையில் பழங்களுடன் அவர் வீட்டு கதவைத் தட்ட முயன்ற கார் மேகத்தை உள்ளே இருந்து வந்த பேச்சைக்
குரல் அப்படியே தடுத்து நிறுத்தியது. "ஏண்டி புவனா!
உனக்கு எத்தனை முறை சொல்றது? நாம வாங்கப் போற பிளாட்டுக்கு பணம் பத்தலை.
போய் உங்க அப்பன் வீட்டுல வாங்கிட்டு வான்னு சொல்லி
ஒரு மாசம் ஆச்சு. இன்னும் போகாமல் அமைதியாகவே இருக்கே? மானம் ரோஷமுள்ள பொம்பளையா இருந்தா இப்பவே போய் வாங்கிட்டு வா. அப்படி இல்லன்னா அங்கேயே அப்படியே இருந்துக்கோ "என்று ரங்கநாதன் அவர் மனைவியிடம் குரலெடுத்துப் பேசப் பேச அவரைப் பற்றி கார்மேகம் கொண்டிருந்த அத்தனை நல்ல எண்ணங்களும் மள மளவென்று சரியத் தொடங்கின .
மு.மதிவாணன்
குபேந்திரன் நகர்
அரூர் 636903
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?