போதைப்பொருள் கடத்தி வந்த படகு மீது அமெரிக்கா தாக்குதல்

போதைப்பொருள் கடத்தி வந்த படகு மீது அமெரிக்கா தாக்குதல்



வாஷிங்டன்,


வெனிசுலா, மெக்சிகோ உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும், கடல் வழியாக போதைப்பொருள் கடத்தி வரும் கும்பல் மீது தாக்குதல் நடத்தவும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.


அதன்படி, கடல் வழியாக படகில் போதைப்பொருள் கடத்தி வரும் கும்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர்.


இந்நிலையில், பசுபிக் கடல் வழியாக போதைப்பொருள் கடத்தி வந்த படகு மீது அமெரிக்கா இன்று தாக்குதல் நடத்தியது. பசுபிக் கடல் வழியாக சர்வதேச கடல்பரப்பில் வந்துகொண்டிருந்த படகு மீது டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் படகில் போதைப்பொருள் கடத்தி வந்த 2 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் போதைப்பொருள் கடத்தி வந்ததாக படகுகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%