அங்கேதான் வைத்திருப்பார், புத்தக அலமாரியில் தான் எங்கேனும் இருக்கும்; தேடிப்பார்த்து எடுத்துட்டு வா; என்று அப்பா எளிதாக சொல்லிவிட்டார். தாத்தாவுக்கு அவருடைய எஸ். எஸ். எல், சி புக்கை பார்க்கணுமாம்.
சிவப்பு காலிக்கோ அட்டையில் 52874 என்று (அவருடைய எஸ். எஸ். எல்.சி. யில் ரெஜிஸ்டரேஷன் எண்) லேபில் ஒட்டியிருக்கும்; என்று அடையாளம் சொல்கிறார். அந்த சர்டிஃபிகேட் புத்தகத்தில் உள்ள பதிவைப் வைத்து எதை மெய்ப்பிக்க வேண்டிய அவசியம் என்ன உள்ளது? புத்தக அலமாரி முழுவதும் அடியோடு கலைத்துப் போட்டும்; தேடிய அவரது எஸ்.எஸ். எல்.சி கண்ணில் படவே இல்லை. திருவாசக புத்தகம்தான் போன மாதம் படித்துக் கொண்டிருத்தேன். அதற்குள் இருக்கலாம்; என்று தாத்தா சொல்ல திரும்பவும் போனவனுக்கு; தலை சுற்றியதன் காரணம்; அங்கிருந்த ஐந்தாறு ' திருவாசக' புத்தகங்களிலும், அவருடைய எஸ். எஸ். எல் .சி. புத்தகம் இல்லை.இன்னும் எத்தனை திருவாசக புத்தகங்கள் இருக்குமோ; என்ற யோசனையுடன்; எதற்கு தாத்தா; அதைத் தேட வேண்டும்? என்று கேட்டான். என் எஸ், எஸ், எல், சி புத்தகத்துக்குக்குள்தான் எனது வாக்காளர் அட்டையை வைத்திருக்கிறேன்.இன்று SIR விண்ணப்ப படிவம் பிறப்பு அலுவலர் வருவதாக இருக்கிறார்கள். என் பெயரை 'சுப்பிரமணியம்' என்று போட்டுஇருக்கா; 'சுப்பிரமணியன்' என்று போட்டிருக்கா ; என்று நினைவில் இல்லை. எனது எஸ் எஸ். எல்.சி புத்தகத்தில் எப்படி போட்டிருக்கு என்பதும் ஞாபகத்தில் இல்லை.
அதாண்டா ! அதைப் பார்த்து எடு. என்றதும்; நீங்கள் பேங்க்ல என்ன பெயர் கொடுத்துருக்கேள்? என்றதும், ஒவ்வொரு பாங்க்கிலும் ஒவ்வோரு மாதிரி எழுதி வைச்சுண்டு இருக்கா.
ஆதார் கார்டில் இன்னும் கந்தர் கோளம் பண்ணிவைச்சுருக்கா. 'ஷுப்ரமணியம்' ன்னு போட்டிருக்கு. என் பெயரே எனக்கு தெரியல்லை மாதிரி இருக்கு .ஒரு வழியா இந்த தரம் என் பெயரை சரி பண்ணிடலாம் என்று இருக்கிறேன்; என்றதும்' அவர் பேச்சில் இருந்த நியாயம் உணர்ந்து, நான் அவருடைய எஸ் எஸ். எல்.சி. புத்தகத்தை மும்முரமாக தேட ஆரம்பித்தேன்.

சசிகலா விஸ்வநாதன்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?